கங்காரு படையை சுருட்டிய தென்னாப்பிரிக்கா.. பிரீட்ஸ்கே சதம், கேசவ் மகராஜ் சுழலில் வீழ்ந்த ஆஸ்திரேலியா
கங்காரு படையை சுருட்டிய தென்னாப்பிரிக்கா.. பிரீட்ஸ்கே சதம், கேசவ் மகராஜ் சுழலில் வீழ்ந்த ஆஸ்திரேலியா
டர்பன்: டர்பனில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 168 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது ஜோடி சேர்ந்த மேத்யூ பிரீட்ஸ்கே மற்றும் மார்கோ ஜான்சென் இணை ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்த பிரீட்ஸ்கே 106 பந்துகளில் 14 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 112 ரன்கள் குவித்தார். அதிரடி காட்டிய மார்கோ ஜான்சென் 59 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார்.
"சச்சின் அளவுக்கு ஆடினீங்க ஆனா அவரளவுக்கு பணம் சம்பாதிச்சீங்களா?" ஸ்டீவ் வாக் கேள்விக்கு ரஹானே பதில் பியோர்ன் போர்டுயின், கார்பின் போஷ் தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். அபார சதம் விளாசியதுடன் களத்தில் 3 அற்புத கேட்ச்களைப் பிடித்த பிரீட்ஸ்கே ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.