📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 25, 2026 12:04 PM

வண்டலூர் அருகே பயங்கரம் அரசுப் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்

வண்டலூர் அருகே பயங்கரம் அரசுப் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்

வண்டலூர் அருகே பயங்கரம் அரசுப் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்

சென்னை: வண்டலூர் அருகே உள்ள கண்டிகை அரசு மேல்நிலை பள்ளி 10ம் வகுப்பு மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள கண்டிகையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வந்தனர்.

அப்போது நேற்று மதியம் மேலக்கோட்டையூரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி வயிற்று உபாதைக்காக பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல், அருகில் உள்ள ஏரிக்கரை வழியாக பள்ளி சுற்று சுவரில் எகிறி குதித்து கழிப்பறைக்கு வந்த மாணவியை குண்டுக்கட்டாக ஏரிக்கரைக்கு தூக்கிச் சென்றனர். அப்போது அவர் அலறியுள்ளார். ஆனால் அவரது வாயில் துணியைவைத்து அடைத்து, அவரை தாக்கியும், மிரட்டியும் தூக்கிச் சென்றனர்.

பின்னர் ஏரிக்கரை பகுதியில் வைத்து மாணவியை 4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பலாத்காரம் செய்த 4 பேரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மாணவியை பலாத்காரம் செய்து விட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவான காட்சிகளை வைத்து 2 பேரை பிடித்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் உறுதிப்படுத்தவில்லை. மேலும், பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது வட மாநில வாலிபர்களா அல்லது பள்ளியிலேயே படிக்கும் சக மாணவர்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள சுற்றுச்சுவரை உயர்த்தி தரும்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை சில சமூக விரோதிகள் உடைத்துவிட்டு பள்ளி வளாகத்திற்குள் புகுந்து நுழைவாயில் உள்ள கேட்டை உடைத்து லைட்டுகளை ஆப் பண்ணிவிட்டு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர். பள்ளி வளாகத்தில் பட்டப்பகலிலேயே 10ம் வகுப்பு மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.