📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 24, 2026 04:04 AM

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை: மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை: மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை: மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்

கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி அன்று திடீரென மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டு வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Published : September 23, 2026 at 5:48 PM IST

சென்னை: கொளத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து இன்று (செப்டம்பர் 23) மருத்துவமனைக்கு நேரில் சென்று முதலமைச்சர் ஜோசப் விஜய் கேட்டறிந்தார்.

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

இதற்கு முன்னதாக, 2006-ஆம் ஆண்டு வி.எஸ்.பாபு, திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தற்போது இரண்டாவது முறையாக கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு சென்றார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று வந்த அவருக்கு, செப்டம்பர் 9-ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வி.எஸ் பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக, அவரை பல்துறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், வி.எஸ்.பாபு தனக்கு அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கும் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார் எனவும் மருத்துவமனை தரப்பில் அண்மையில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அமைந்தகரை உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்றார். அங்கு அவர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்தார்.

வி.எஸ்.பாபுவிற்கு மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் முதலமைச்சர் விஜய்யிடம் விவரித்தனர். இதையடுத்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ குழுவை முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.