📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 24, 2026 08:01 AM

கொஞ்சம் வெயில், அதிக மழை ! இடி , மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு !

கொஞ்சம் வெயில், அதிக மழை ! இடி , மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு !

கொஞ்சம் வெயில், அதிக மழை ! இடி , மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு !

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (24-09-2026) சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் வட தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மழை நிலவரம் :

தமிழ்நாட்டில் கடந்த சில மணி நேரங்களில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவியது.

தற்போது சுமார் 7.6 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல அமைப்பு மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதையின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழைக்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் வழியாக தாய்லாந்து வளைகுடா வரை நீண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரித்து மழைக்கு சாதகமான நிலை உருவாகியுள்ளது.

இன்று (24-09-2026) மழை பெய்யக்கூடிய பகுதிகள் :

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சில பகுதிகளில் மழையுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை நிலவரம் :

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது.

பகல் நேரங்களில் நிலவும் வெப்பநிலை இயல்பான அளவிலேயே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என்பதால் பெரிய அளவிலான வெப்ப தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. சென்னை வானிலை முன்னறிவிப்பு :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் கடல் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு செல்லும் மீனவர்கள் வானிலை எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.