📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 08, 2026 10:04 AM

கோவை அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் 'இந்தி' சர்ச்சை; உடனடியாக மாற்றப்பட்ட கவர்; பின்னணி என்ன?

கோவை அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் 'இந்தி' சர்ச்சை; உடனடியாக மாற்றப்பட்ட கவர்; பின்னணி என்ன?

கோவை அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் 'இந்தி' சர்ச்சை; உடனடியாக மாற்றப்பட்ட கவர்; பின்னணி என்ன?

மாத்திரை கவர்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியிலும் மாத்திரை சாப்பிடும் வேளை மற்றும் எப்போது சாப்பிட வேண்டுமென்ற குறிப்புகள் இடம்பெற்று இருந்தன.

கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனர்.

சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வரும் இந்தக் கவருக்கான செலவை, சில தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் மாத்திரை கவரில் இந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ள போல. முதலில் கரூர்... இப்போது கோவையிலும் அதே நிலைமை” எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மருத்துவமனையில் அதிகாரிகள் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இதுபோல மூன்று மொழிகளைக் கொண்ட மாத்திரை கவர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பழைய மருந்து கவரில் மாத்திரைகள் வழங்குவதை நிறுத்திவிட்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே குறிப்புகள் உள்ள வகையிலான புதிய கவரில் மாத்திரைகள் வழங்கப்படும்” என்றனர்.

இதனை தொடந்து இந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருந்த மாத்திரை கவர்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. மருந்தகத்தில் இருந்த அனைத்து கவர்களும் அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் இன்று காலை முதல் எந்த வாசகங்களும் இல்லாத கவரில் மாத்திரைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் மாத்திரை உட்கொள்ளும் வேளை குறித்து தமிழில் மருந்தாளுநர்கள் கைப்பட பேனாவால் எழுதி தருகின்றனர்.