கொடூர பாலியல் குற்றங்களுக்கு என்கவுன்டர் மட்டுமே தீர்வு: பிரேமலதா பேச்சு
கொடூர பாலியல் குற்றங்களுக்கு என்கவுன்டர் மட்டுமே தீர்வு: பிரேமலதா பேச்சு
சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, மனித வள மேலாண்மை துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு விருத்தாசலம் தொகுதி உறுப்பினர் பிரேமலதா (தேமுதிக) பேசியதாவது:
மாணவர்கள் கொலை, பாலியல் வன்கொடுமை இதற்கெல்லாம் காரணம் போதை பொருள் தான். அதை பயன்படுத்துபவர்கள் மிருகமாக மாறிவிடுகிறார்கள். சிறு குழந்தைகளை கூட பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். அதற்கு என்கவுன்டர் ஒன்றே தீர்வு. திண்டுக்கல்லில் தொடர்ந்து தனது பேத்தியை பாலியல் கொடுமை செய்த ஒருவரை அந்த சிறுமியின் பாட்டி அரிவாளால் வெட்டினார். அவர் தான் உண்மையான வீரநாச்சியார்.
அவை முன்னவர் செங்கோட்டையன்: பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து உணர்வுகளை வெளிப்படுத்தி பேசினார். முதல்வர் இதற்கான கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.