📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 05, 2026 12:03 AM

குடிநீர் விநியோகம் தொடர்பான தகராறில் பஞ்சாயத்து தலைவர் செங்கல்லால் அடித்துக் கொலை

குடிநீர் விநியோகம் தொடர்பான தகராறில் பஞ்சாயத்து தலைவர் செங்கல்லால் அடித்துக் கொலை

குடிநீர் விநியோகம் தொடர்பான தகராறில் பஞ்சாயத்து தலைவர் செங்கல்லால் அடித்துக் கொலை

கொலை சம்பவம் தொடர்பாக வள்ளியூர் போலீசார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Published : September 4, 2026 at 10:52 PM IST

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தாமரைக்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மகராஜன் (68). இவர் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஊர் பொது குடிநீர் தொட்டியில் இருந்து பஞ்சாயத்து சார்பில் இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இசக்கியப்பன் (40) என்பவரது வீட்டிற்கு குடிநீர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த இசக்கியப்பன், பஞ்சாயத்து தலைவர் மகராஜனின் வீட்டிற்குச் சென்று குடிநீர் விநியோகம் குறித்துக் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இசக்கியப்பன் அருகில் கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த செங்கல்லை எடுத்து, பஞ்சாயத்து தலைவர் மகராஜனின் நெற்றியில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து அவர் கீழே சரிந்ததைத் தொடர்ந்து, இசக்கியப்பன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இரத்தக் காயங்களுடன் கிடந்த மகராஜனை, அவரது உறவினரான சங்கர் என்பவர் மீட்டு உடனடியாக பரப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், மகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய இசக்கியப்பனையும் தேடி வருகின்றனர். குடிநீர் தகராறில் பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் கொலை நடந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.