📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 07, 2026 05:34 PM

கூட்டுக் குடும்பத்தில் மோதல்; அதிக சத்தத்துடன் மியூசிக்; சகோதரர்கள் சண்டையில் தந்தை, மகன் கொலை

கூட்டுக் குடும்பத்தில் மோதல்; அதிக சத்தத்துடன் மியூசிக்; சகோதரர்கள் சண்டையில் தந்தை, மகன் கொலை

கூட்டுக் குடும்பத்தில் மோதல்; அதிக சத்தத்துடன் மியூசிக்; சகோதரர்கள் சண்டையில் தந்தை, மகன் கொலை

மும்பையில் நள்ளிரவில் அதிக சத்தத்துடன் மியூசிக் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மும்பை விக்ரோலியில் வசித்து வந்தவர் சுனில் விஷ்வகர்மா(40). இவர் ஒரே வீட்டில் தனது குடும்பம் மற்றும் மேலும் 3 சகோதரர்கள் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

இரவில் அதிக சத்தத்துடன் சுனில் பாட்டு கேட்டுள்ளார். இதனை மற்றவர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இத்தாக்குதலுக்கு கம்பு, தடி, கத்தி போன்றவைப் பயன்படுத்தப்பட்டன. இத்தாக்குதலில் சுனில, அவரது மகன் ஸ்லோக்(14) மற்றும் மனைவி உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்த தகவல் கிடைத்தவுடன் போலீஸார் விரைந்து வந்து காயம் அடைந்த நான்கு பேரையும் அதிகாலை நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் சுனிலும், அவரது மகனும் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துவிட்டனர். மேலும் அவரது மனைவியும் மற்றும் மற்றொரு மகனும் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேந்திர விஸ்வகர்மா மற்றும் சூரஜ் விஸ்வகர்மாவைக் கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''விஸ்வகர்மா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்களில் இருவர் மாடியில் வசிக்கின்றனர். அதிகாலை 2:00 மணியளவில், சகோதரர்களில் ஒருவரான சுனில் விஸ்வகர்மா அதிக ஒலியில் இசையைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்குஅவரது சகோதரர்களான சுரேந்திரா மற்றும் சூரஜ் விஸ்வகர்மா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.

இந்த மோதல், கடுமையான வாய் தகராறாக மாறியது. பின்னர் அது வன்முறையாக மாறியது. கைகலப்பின்போது, ​​சுரேந்திரா மற்றும் சுராஜ் ஆகியோர் சுனில் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது'' என்று தெரிவித்தனர்.