📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 17, 2026 02:04 PM

Madugam Box Office: என்ன விஷால் இதெல்லாம்? 3வது நாளிலும் சரிந்த வசூல்.. அடியோடு சொதப்பிய மகுடம்!

Madugam Box Office: என்ன விஷால் இதெல்லாம்? 3வது நாளிலும் சரிந்த வசூல்.. அடியோடு சொதப்பிய மகுடம்!

சென்னை: அதிரடி ஆக்ஷன் ஹீரோவான விஷால் இயக்கி நடித்திருக்கும் 'மகுடம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின் தமிழ் சினிமாவில் அஞ்சலி என்ட்ரி கொடுத்து இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் மூன்றாம் நாள் எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

மகுடம்: நடிகர் விஷால் துப்பாறிவாளன் 2 படத்தின் போது மிஷ்கினுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தானே அந்த படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால், இந்த படம் இதுவரை என்ன ஆச்சு என தெரியில்லை. இதையடுத்து, இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் மகுடன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், ரவி அரசுடன் ஏற்பட்ட பிரச்சனையால், மகுடம் படத்தை தானே இயக்குவதான அறிவித்து படத்தை இயக்கி விஷால் மகுடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்.

படத்தின் கதை: இந்த படத்தில் மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவாக இருக்கும் விஷால், தனது மாமனாரான தம்பி ராமையாவிடம் பெரிய சம்பளம் வாங்குவதாகப் பொய் சொல்லி, துஷாரா விஜயனைத் திருமணம் செய்கிறார். ஒரு குழந்தை பிறந்த பின், மனைவியின் ஆசையை நிறைவேற்ற கடன் வாங்கி பி.எம்.டபிள்யூ (BMW) கார் ஒன்றை வாங்குகிறார். அந்த காரில் ஊட்டிக்குச் செல்லும் வழியில் ஒரு பெரிய கும்பல் அவர்களைத் தாக்கி, மனைவியையும் மகளையும் கொல்கிறது. விஷால் தனது மகனுடன் தப்பிக்கிறார். அதன்பின் அஞ்சலி கதைக்குள் வருகிறார். அந்த கும்பல் ஏன் விஷால் குடும்பத்தை பழி தீர்க்க என்ன காரணம் என்ற கதையுடன் மகுடம் படத்தின் கதை நகர்கிறது.

என்ன விஷால்: நடிகராக தயாரிப்பாளராக ஜெயித்த விஷால் இயக்குநராக ஜெயிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் பல இடத்தில் தேவையில்லாமல் வரும் காட்சிகளும் சண்டைகளும் சலிப்பை ஏற்படுத்திவிட்டன. படம் பார்த்த பலர் என்னடா இது என நொந்துக்கொண்டு தியேட்டரை விட்டு வெளியில் வருவதை பார்க்க முடிந்தது. விஷால் புது இயக்குநராக இருந்தாலும் இத்தனை ஆண்டு நடிகராக இருக்கும் அவருக்கு மக்கள் எதை ரசிப்பார்கள் என்பது தெரியாதா என படம் பார்த்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

3 நாள் வசூல்: ஆகஸ்ட் 14ந் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் 60 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்தது. இரண்டாவது நாள் கூடுதலாக பத்து லட்சம் ரூபாயை வசூலித்து 70 லட்சம் ரூபாய் வசூல் என்ற நிலையில் இருக்கிறது. மூன்றாம் நாளான நேற்று வெறும் 56 லட்சத்தை மட்டுமே வசூலித்துள்ளது. இது முதல் நாள் வசூலை விட குறைவாகும். ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில் படத்தின் வசூல் வெகுவாக குறைந்துள்ளது.