Meesaya Murukku 2 X Review
சென்னை: ஹிப்ஹப் தமிழா ஆதி இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் மீசைய முறுக்கு 2. இதன் முதல் பாகம் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக இரண்டாவது பாகத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் சூழலில்; படம் இன்று ரிலீஸாகிறது. இந்நிலையில் ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோவில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் வைத்திருக்கிறார்கள்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி முதலில் பாடல்கள் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமடைந்தார். வாடி புள்ள வாடி, க்ளப்புல மப்புல உள்ளிட்ட பாடல்கள் அவருக்கென்று தனி ரசிகர்களை உருவாக்கியது. அதனையடுத்து தனி ஒருவன், ஆம்பள படங்களுக்கு இசையமைத்து இசையமைப்பாளராக மாறினார். அப்படியே நடிகர், இயக்குநராகவும் மாறிவிட்டார் அவர்.
மீசைய முறுக்கு 2: அந்தவகையில் முதலில் மீசைய முறுக்கு படத்தை கடந்த 2017ஆம் ஆண்டு இயக்கினார். அப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சிவக்குமாரின் சபதம், அன்பறிவு, கடைசி உலகப்போர் உள்ளிட்ட படங்களையும் இயக்கினார். இப்போது அவர் மீசைய முறுக்கு 2 படத்தை இயக்கியிருக்கிறார். அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இதில் அவருடன் கெத்திகா ஷர்மா, சைத்ரா, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
மீசைய முறுக்கு 2 எக்ஸ் விமர்சனம்: படமானது இன்று தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. நேற்று சென்னையில் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்கள். அந்தவகையில் படம் பார்த்த இவர், "மீசைய முறுக்கு 2 எளிமையான, ஜாலியான படமாக இருக்கிறது. படத்தை புரிந்துகொள்ள வைக்க அதிகம் மெனக்கெடவில்லை.
அதுவே பலமாக இருக்கிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் எழுத்தும், இயக்கமும் இலகுவாக இருக்கிறது. முதல் பாதியி ஜென் ஸி தலைமுறை ரசிகரக்ளை கவரும் வகையில் உருவாக்கியிருக்கிறார். இரண்டாவது பாதியில் ஆன்மீக தொடர்பை எடுத்துக்கொண்டு படத்தை முழுமையான அனுபவமாக்கியிருக்கிறார். கடைசி 20 நிமிடங்கள் வலுவாக மாற்றுகின்றன" என குறிப்பிட்டிருக்கிறார்.
இவரும் பாசிட்டிவ்தான்: இன்னொரு ரசிகர், 'மீசைய முறுக்கு 2 ஆதி இரண்டாம் பாதியில் படத்தை முழுமையான பொழுதுபோக்கு படமாக மாற்றியிருக்கிறார். படத்தின் மைய உணர்வு சிறப்பாக வேலை செய்திருக்கிறது. அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. முதல் பாதி ஜென் ஸி ரசிகர்களுக்கானது. நடிகைகளில் ரம்யா ரங்கநாதனை மிகவும் பிடித்திருக்கிறது.
அவரது கேரக்டர் படத்தின் பலம். சைத்ரா குறுகிய நேரமே வந்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். கெத்திகா பெரும்பாலும் நகைச்சுவை, கிளாமருக்காக பயன்படுத்தபப்ட்டிருக்கிறார். ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று நினைப்பது இயல்பானதுதான் என்ற கருத்தை முன்வைக்கிறது" என புகழ்ந்திருக்கிறார்.
ஒவ்வொரு ஏரியாவாக: இந்த ரசிகர் படத்தின் ஒவ்வொரு ஏரியாவையு பிரித்து சொல்லியிருக்கிறார். தன்னுடைய பக்கத்தில், "நடிப்பு: வெவ்வேறு கேரக்டர்களில் நடித்து சமாளிக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆத் வலுவான நடிப்பை வழங்கியிருக்கிறர். அவருக்கு ரம்யாவும், கருணாஸும் துணையாக நிற்கிறார்கள். இசை மற்றும் பாடல்கள்: படத்தின் பெரிய பலமாக இருக்கிறது.
படம் முழுவதும் அதன் எனர்ஜியை இசை தக்க வைக்கிறது. முதல் பாதி: திசையில்லாத திரைக்கதையால் முதல் பாதி தடுமாறுகிறது. உண்மையான கதையே இடைவேளையிலிருந்துதான் தொடங்குகிறது. இரண்டாவது பாதி: ஏற்கனவே பார்த்து பழகிய கதைக்கள அம்சங்களை கொண்டிருந்தாலும் ஈர்க்கக்கூடிய மற்றும் ஊக்கமளிக்கும் காட்சிகளால் இரண்டாவது பாதி சிறப்புதான். முதல் பாதியில் ஏற்படும் மந்தத்தையும், இசையையும் இரண்டாம் பாதி சரி செய்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார்.