Tamil Nadu
September 25, 2026 09:03 PM
மின்வெட்டை நீக்காமல் தமிழக அரசு அலட்சியம் அன்புமணி கண்டனம்
மின்வெட்டை நீக்காமல் தமிழக அரசு அலட்சியம் அன்புமணி கண்டனம்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசார கலந்தாய்வுக் கூட்டத்தின் போது மின் தடை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டும், அடிக்கடி ஏற்படும் மின் தடைகளும் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முதல்வர் விஜய் நேரடியாக சென்ற பிறகும் மின்வெட்டு தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் இனியும் அலட்சியம் காட்டாமல், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வெட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu