மகேஷ் பாபுவே பாராட்டுறாரே.. சமீபத்தில ரிலீஸான தமிழ் படத்துக்கு கிடைத்த உச்சகட்ட உற்சாகம்!
ஹைதராபாத்: ராஜமெளலி இயக்கத்தில் வாரணாசி படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபுவுக்கு ஒரு தமிழ் படத்தை பார்க்க நேரம் கிடைத்ததே மிகப்பெரிய விஷயம் என பேசிக் கொள்கின்றனர். பொதுவாக எந்த வொரு படத்தையும் பார்த்து இப்படியெல்லாம் மகேஷ் பாபு பாராட்டி பதிவிடுவது ரொம்பவே ரேரான விஷயம் தான்.
அப்படி அமைதியாக தான் உண்டு தனது படங்கள் உண்டு என இருக்கும் மகேஷ் பாபுவையே பாராட்ட வைத்துள்ள சமீபத்திய படம் என்ன தெரியுமா? நம்ம லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான டிசி திரைப்படம் தான்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த டிசி படத்தை பார்த்துவிட்டு மகேஷ் பாபு மனசார பாராட்டியுள்ளார்.
டிசி வசூல்: லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான டிசி திரைப்படம் 10 நாட்களில் 84 கோடி வசூலை கடந்துள்ளது. இந்த வாரம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூலில் சக்கைப் போடு போட்டு 100 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்த நிலையில், டிசி திரைப்படமும் ஞாயிற்றுக்கிழமை 4 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்துள்ளது. இந்த வார முடிவில் கண்டிப்பாக 100 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகேஷ் பாபு பாராட்டு: ராஜமெளலி இயக்கத்தில் இந்திய சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் வாரணாசி படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு டிசி படத்தை நேற்று பார்த்துவிட்டு மனதார பாராட்டி எக்ஸ் தளத்தில் போட்ட பதிவு தீயாக பரவி வருகிறது. ஒரிஜினல் மற்றும் அவுட்ஸ்டாண்டிங் படம் டிசி. ரொம்ப கூலா இருந்துச்சு, ஒவ்வொரு அணுவையும் ரசித்துப் பார்த்தேன். மொத்த டீமுக்கும் என் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் என பதிவிட்டுள்ளார் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.
அனிருத் நன்றி: மகேஷ் பாபு டிசி படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதை அறிந்த உடனே அடுத்த நொடியே அனிருத் ரொம்ப நன்றி சார் என கமெண்ட் போட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுனை வைத்து லோகேஷ் கனகராஜ் தெலுங்கில் அடுத்து படம் பண்ண உள்ள நிலையில், ராஜமெளலி படத்தை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.