📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 07, 2026 09:01 PM

மக்களிடம் கொடுத்தது டம்மி போனா? அம்பலமானது பிக் பாஸ் 10 ரகசியம்!

மக்களிடம் கொடுத்தது டம்மி போனா? அம்பலமானது பிக் பாஸ் 10 ரகசியம்!

சென்னை: பிரமாண்டமாகத் தொடங்கியுள்ள 'பிக் பாஸ் சீசன் 10' நிகழ்ச்சியில், எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் நாளிலேயே சர்ச்சைகளும் சந்தேகங்களும் காட்டுத்தீ போலப் பரவத் தொடங்கியுள்ளன. மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, ஆட்டம், பாட்டம் என கிராண்ட் லாஞ்ச் களைகட்டினாலும், மேடையில் நடந்த எலிமினேஷன் நாடகம் பார்வையாளர்களை ஏமாற்றும் விதமாக அமைந்திருப்பதாக சோஷியல் மீடியாவில் நென்டிசன்ஸ் கொந்தளித்து வருகின்றனர்.

பிக் பாஸ் 10: பொதுவாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல மாதக்கணக்கில் நேர்காணல், ஒப்பந்தங்கள் என பல கட்டங்களை தாண்டித்தான் போட்டியாளர்கள் தேர்வாவார்கள். ஆனால், இந்த முறை மேடையில் மூன்று பேரை நிற்கவைத்து, ஆளுக்கு 1 நிமிஷம் பேசவிட்டு, பார்வையாளர்கள் கையில் ஒரு போனைக் கொடுத்து உடனடியாக வாக்களிக்க வைத்தனர். பார்வையாளர்கள் கையில் கொடுத்தது வெறும் டம்மி போனா? ஒரு நிமிஷத்து பேச்சை வச்சு எந்த மக்களும் ஓட்டு போட முடியாது. எல்லாமே தயாரிப்புக் குழு ஏற்கனவே பிளான் பண்ணிய ஸ்கிரிப்டா என்றும் "டம்மி பாவா" என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஏதோ இடிக்கிதே: இத்தனை நாள் ஆசையோடு தயாராகி வந்து, மேடையிலேயே வாய்ப்பு மறுக்கப்பட்டு வெளியேற்றப்படும் ஒருவர் முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லாமல் சிரித்தபடியே விஜய் சேதுபதிக்கு கையை கொடுத்துவிட்டு செட்டை விட்டு வெளியேறியது இன்னும் மிகபெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இவ்வளவு காலம் இந்த நிகழ்ச்சிக்காக கஷ்டப்பட்டு வந்துட்டு, கடைசி நிமிஷத்துல துரத்தினா யாராச்சும் சிரிச்சிட்டே போவாங்களா? ஏதோ ஒன்னு இடிக்குதே... கண்டிப்பா இவங்க எல்லாரையும் அடுத்து 'வைல்டு கார்டு' (Wild Card) வழியா உள்ள அனுப்பப்போறாங்களோ என ரசிகர்கள் கணிக்கின்றனர்.

வீட்டு தல: அதே சமயம் இந்த சீசனில் உள்ளே சென்றுள்ள பெரும்பாலான போட்டியாளர்கள் இளம் வயதினராகவே இருப்பதால், இந்த முறை வழக்கத்தை விடக் Physical Tasks, காதல், ரொமான்ஸ் என அனைத்திற்கும் பஞ்சமே இருக்காது. வீட்டிற்குள் போனதுமே இந்த வாரத்தின் கேப்டனாக ஷாதிகா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஆரம்பமே அமர்களம் என்பது போல முனியம்மா ஜனநாயகன் அறையில் வெளிநடப்பு செய்தார்.