மகனுக்கு மொட்டை போட்டாச்சு.. சர்ச்சைகளுக்குப் பின் மாதம்பட்டி ரங்கராஜுடன் இணைந்த ஜாய் கிரிசில்டா!
சென்னை: சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா விவகாரத்தில் தற்போது ஒரு சுபமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் ராகாவுக்கு மொட்டை அடித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், அவர் தன்னைத் திருமணம் செய்துகொண்டு, தான் கர்ப்பமாக இருந்த நேரத்தில் தன்னை விட்டு சென்றுவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கூறப்பட்டது.
மாதம்பட்டி ரங்கராஜ்: இதையடுத்து நடத்தப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையில் மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது உறுதியானது. இதையடுத்துக் குழந்தையின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ், தனது மகன் ராகாவை கொஞ்சும் புகைப்படத்தைப் பகிர்ந்து, எனது மகன் ராகாவிற்கு, ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழு பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன். இனி, என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழு பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு இருந்தார்.
மகனுக்கு மொட்டை: இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன் ராகாவுக்கு கோவிலில் மொட்டை அடித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் ஜாய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்