📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 25, 2026 11:04 AM

மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்

மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்

சென்னை: மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த் என முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழக சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேமுதிகவின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.

திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

திமுக தலைவர், ஸ்டாலின்

ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று; அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தேமுதிக தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் பிரேமலதாவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டனின் புகழ் நீடுவாழ்க.