📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 26, 2026 01:04 AM

சிங்கப்பூர் அரசு புது திட்டம் குழந்தைகள் 17 வயதை எட்டும் வரை ரூ.53 லட்சம் நிதியுதவி

சிங்கப்பூர் அரசு புது திட்டம் குழந்தைகள் 17 வயதை எட்டும் வரை ரூ.53 லட்சம் நிதியுதவி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குறைந்துவரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், குடும்பங்களை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு குழந்தைக்கும் 17 வயது வரை சுமார் 70,000 சிங்கப்பூர் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.53 லட்சம்) நிதி உதவி வழங்குவதாக அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. சிங்கப்பூரின் மொத்த கருத்தரிப்பு விகிதம் வரலாறு காணாத வகையில் 0.87 ஆகக் குறைந்துள்ளது. இதையொட்டி, பிரதமர் லாரன்ஸ் வோங் இந்த புதிய திட்டத்தை அறிவித்தார்.

பிறந்தவுடன் குழந்தை அன்பளிப்பாக 10,000 சிங்கப்பூர் டாலர் வழங்கப்படுகிறது. குழந்தைக்கு 16 அல்லது 17 வயது வரை ஆண்டுதோறும் குழந்தை வரவுகள் (சைல்ட் கிரெடிட்ஸ்) மற்றும் இதர மானியங்கள் வழங்கப்படுகின்றன. கல்வி மற்றும் மருத்துவ சேமிப்பு கணக்குகளுக்கு சிறப்பு நிதியுதவிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பெற்றோர் விடுமுறை கால நீட்டிப்பு மற்றும் முழு நாள் குழந்தை பராமரிப்புச் சலுகைகளும் இதில் அடங்கும்.