📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 22, 2026 01:03 AM

‘மண்டாடி’ ரூ.100 கோடி வசூல்.. வரலாறு படைத்த சூரி! டாப் 5 லிஸ்ட்டில் இடம்!

‘மண்டாடி’ ரூ.100 கோடி வசூல்.. வரலாறு படைத்த சூரி! டாப் 5 லிஸ்ட்டில் இடம்!

‘மண்டாடி’ ரூ.100 கோடி வசூல்.. வரலாறு படைத்த சூரி! டாப் 5 லிஸ்ட்டில் இடம்!

மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த மண்டாடி, மீனவர்களின் வாழ்க்கை, படகுப்போட்டி, கடல் விளையாட்டு ஆகியவற்றை மையமாகக் கொண்டு வெளியானது. ஜிவி பிரகாஷ் இசை, கேமரா ஒர்க், விறுவிறுப்பான திரைக்கதை காரணமாக ரசிகர்கள் பெரிதும் கொண்டாடும் இப்படம், இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்த்து ரூ.103.72 கோடி வசூலித்து, சூரியின் முதல் 100 கோடி கிளப் படமாக வரலாறு படைத்துள்ளது.

இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மண்டாடி திரைப்படம், மீனவர்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியையும் மையமாக கொண்டு வெளியானது. சூரியுடன் மகிமா, சுஹாஸ், சத்யராஜ் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடல் விளையாட்டு, விறுவிறுப்பான திரைக்கதை, பின்னணி இசை, கேமரா ஒர்க் என அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு தியேட்டர் விருந்தாக களமிறங்கிய மண்டாடியை பெருவாரியான ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

இத்திரைப்படம் சூரியின் திரைவாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மைல்கல் திரைப்படமாக மாறியுள்ளது. இதற்குபிறகு சூரியை ‘மண்டாடி சூரி’ என அழைத்தாலும் மிகைப்படுத்துவதற்கில்லை. அந்தவகையில் படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

Madurai Mannin Maindhan #Soori welcomes the #Mandaadi Team! ❤️We, Team #Mandaadi, at our very own Mandaadi @sooriofficial anna’s place! 😍🥳A warm welcome filled with love, pride and celebrations! 💥🥳#Mandaadi is Running Successfully in theatres near you! 🎞️💥… pic.twitter.com/yRDdhmzThF

கடந்த 10ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான மண்டாடி திரைப்படம், 12ஆம் நாளில் காலடி எடுத்துவைத்துள்ளது. இரண்டாம் வார இறுதியில் இந்திய அளவில் நிகர வசூலாக ரூ. 75.55 கோடியை வசூலித்துள்ளது. இதன் இந்திய மொத்த வசூல் ரூ.88.32 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் இப்படம் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளிநாட்டு சந்தைகளில் இருந்து ரூ. 75 லட்சத்தை ஈட்டியுள்ளது. இதன் மொத்த வெளிநாட்டு வசூல் ரூ. 15.40 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடு இரண்டையும் சேர்த்து உலகளாவிய மண்டாடி திரைப்படத்தின் மொத்த வசூல் ரூ. 103.72 கோடியாக உயர்ந்துள்ளது. இது சூரியின் திரை வாழ்க்கையில் வசூலில் சதமடிக்கும் முதல் திரைப்படமாகும். இதன்மூலம் 100 கோடி வசூல் கொடுத்த தமிழ் நடிகர்களில் பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துள்ளார் சூரி.

இதற்கிடையில், மண்டாடியுடன் வெளிவந்த கார்த்தியின் 'சர்தார் 2' திரைப்படம் உலகளவில் வெறும் ரூ.23.55 கோடியை மட்டுமே வசூலித்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அதேநேரத்தில் 100 கோடியை வசூலித்திருக்கும் சூரியின் மண்டாடி திரைப்படம், மற்றொரு சாதனையாக, இந்த வருடம் வெளியாகி இந்திய அளவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் பட்டியலில் ஜனநாயகன், கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் டிசி திரைப்படங்களுடன் டாப் 5 லிஸ்ட்டில் இணைந்துள்ளது.