Religion
August 07, 2026 08:33 AM
மருதமலையில் ஆடி கிருத்திகை
மருதமலை: மருதமலை முருகன் கோயிலில் நேற்று ஆடி கிருத்திகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி, ரத்ன அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, திருக்கல்யாண மண்டபத்தில், வள்ளி, தெய்வானையுடன் உற்சவ மூர்த்தி எழுந்தருளினார்.
கோயில் மற்றும் அரசு பஸ்கள், மலைமேல் உள்ள பார்க்கிங் ஏரியா வரை இயக்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணி செய்தனர்.