📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 30, 2026 07:04 PM

முதலமைச்சர் விஜய் திடீரென இடம் மாறி அமர்ந்தது ஏன்..?

முதலமைச்சர் விஜய் திடீரென இடம் மாறி அமர்ந்தது ஏன்..?

முதலமைச்சர் விஜய் திடீரென இடம் மாறி அமர்ந்தது ஏன்..? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்..!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வருக்கு தனி இருக்கையும், அமைச்சர்களுக்கு தனி வரிசையும் அவர்களுக்கு பின்னால் எம்எல்ஏக்களுக்கும் இடம் ஒதுக்கப்படும். முந்தைய காலங்களில், பேரவைக்கு வரும் முதல்வர், அவைக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்து விடுவார். ஆனால் முதல்வர் விஜய் பேரவைக்குள் வந்ததும், உள்ளே சென்று அனைவரையும் பார்த்து வணக்கம் வைத்துவிட்டு அதன் பிறகு தான் தனது இருக்கையில் வந்து அமர்கிறார்.

இந்த சூழலில் நேற்று (ஆகஸ்ட் 27) பிற்பகல் தனது இருக்கையில் அமராமல் அமைச்சர்கள் வரிசையில் சென்று திடீரென அமர்ந்தார்.முதலமைச்சரின் இந்த திடீர் நகர்வு மற்றும் சக அமைச்சர்களுடனான உரையாடல் குறித்து ஊடகங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெளிவான பதிலை அளித்துள்ளார்:

அவையினரை உற்சாகப்படுத்தும் நோக்கம்: அவையில் உள்ள அனைவரும் மிகுந்த சுறுசுறுப்புடனும் மன உற்சாகத்துடனும் பணியாற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் முதன்மை விருப்பமாகும்.ஒருங்கிணைந்த பணிச்சூழல்: சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கும் எண்ணத்திலேயே முதலமைச்சர் விஜய் தனது வழக்கமான இருக்கையை விட்டு நகர்ந்து, அமைச்சர்களோடு ஒன்றாக வந்து அமர்ந்து கலந்துரையாடினார்.

மேலும் சட்டமன்றத்தில் அருகில் அமர்ந்தது விஜய் என்ன பேசினார் என்ற கேள்விற்கு என்னிடம் என்ன பேசினார் என்பதை சொல்வது முறையாக இருக்காது. எல்லோரையும் உற்சாகப்படுத்த வேண்டும் என விரும்புகிறார். ஒரு முதலமைச்சர் இந்த அளவிற்கு நடந்து கொண்டு இருக்கிறார் என்ற நிலை மாறி ,

ஒரு மாற்றத்தை எல்லோரும் சேர்ந்து உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காக அருகில் அமர்ந்திருக்கிறார் என தெரிவித்தார்.