📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 30, 2026 07:01 PM

மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்க தமிழக அரசு பரிசீலனை

மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்க தமிழக அரசு பரிசீலனை

பரந்தூர் விமான நிலையத்திட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரி வாக்கம் செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து இதுவரை கையகப்படுத்தப் பட்டுள்ள நிலங்கள்தொழில்துறை செயல்பாடுகளுக்கு பயன்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு திட்டங்கள் குறித்து எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

பரந்தூர் விமான நிலையம்

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள நிலத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் ஏராளமான நிலங்களும் அரசால் கையகப்படுத்தப்பட்டுவிவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் வழங்கப்பட் டது.ஆனால் விவசாயிகளும், அந்தபகுதிமக்களும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

சட்டப்பேரவையில் மிகப்பெரிய விவாதம்

ஏற்கனவே, அந்த பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து விஜய் அங்கு செல்ல முயன்றது மிகப் பெரிய கவனத்தை எல்லோராலும் ஈர்க்கப்பட்டது. இந்தநிலையில் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது பரந்தூர் விமான நிலையத்திட்டம்கைவிடப் படுகிறது என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். இது சட்டபேரவையில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தொழில் வளர்ச்சி தமிழகத் தில் பாதிக்கும் என்று தெரி வித்தது.இந்த சூழலில் பரத் தூர்மக்கள்விமானநிலையத் திட்டம் கைவிடப்பட்டதை ஆதரித்தனர். மகிழ்ச்சி தெரி வித்தனர். இந்நிலையில் பரந்தூரில் தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அனைத்துதரப்பினரின்எதிர் பார்ப்பாக இருந்தது.

விரிவாக்க பரிசீலனை

இப்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் மீனம் பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு நடத்தி விரைவில் டெண்டர்விடப்படும் தெரிகிறது. பொழிச்சலூர், தாராப்பாக்கம் அணுகு சாலை அமைக்கவும் தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

5-ஆவது முனையம்