முதல்வர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவரால் சர்ச்சை
தாராபுரம்: தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட் டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப் பட்டவர், 8 நாட்களில் த.வெ.க.வில் இணைந்து, முதல்வர் விஜய் நடத்திய ரோடு ஷோவில் அவருக்கு மாட்டு வண்டி ஓட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட் டம், தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் சத்ய பாமா, கடந்த 26ம் தேதி குண்டடம் அடுத்த பொட்டிக்காம்பாளையம், முண்டு வேலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு அமைச்சர்களுடன் பிரசாரத்துக்கு சென்றார். அப்போது, கிராமத்துக்குள் வர எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., மற் றும் தி.மு.க.வினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரசாரம் பாதியில் முடிக்கப் பட்டது. தொடர்ந்து சிலர் இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து, வேட்பாளருக்கு எதிராக கோஷமிட்டனர்.
இது குறித்து அளிக்கப் பட்ட புகாரின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 8 பேர் மீது குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சிலர் பெயரும் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், வழக்கில் இடம்பெற்ற பொட்டிக்காம்பாளையத்தை சேர்ந்த அசோக் என்பவர், நேற்று முன்தினம் தாராபுரத்தில் நடந்த முதல்வர் விஜயின் ரோடு ஷோவில் மாட்டு வண்டி ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. த.வெ.க. துண்டு அணிந்திருந்த அவர், முதல்வரை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றார்.
ஆடியோ ஆதாரம்
அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வகுமரன் கூறுகையில், 'போலீசா ரால் தேடப்பட்டவர் எப் படி முதல்வரின் அருகில் பாதுகாப்பாக இருந்தார்? இதன் மூலம் இந்த வழக்கு பொய் வழக்கு என்பது தெரிகிறது.
அசோக் அ.தி.மு.க.வில் இருந்தவர். அவர் உள்பட பலரை மிரட்டி த.வெ.க., வில் சேர்த்துள்ளனர். இதற்கான ஆடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. தேவைப்படும் நேரத்தில் வெளியிடுவோம்' என்றார்.
முதல்வர் விஜய் சென்ற மாட்டு வண்டியை, தேடப்படும் குற்றவாளி ஓட்டியது எப்படி?' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை ஆகியோர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதன் விபரம்: ஆர்.எஸ்.பாரதி தாராபுரத்தில் முதல் வர் விஜய் பிரசாரத்தின்போது, மாட்டு வண்டியில் பயணம் செய்தார்; அசோக் என்பவர் மாட்டு வண்டியை ஓட்டினார். அந்த அசோக், த.வெ.க., வினர் அளித்த புகாரில் தேடப்படும் குற்றவாளி. இது போலீசாருக்கு தெரியாதா? தாராபுரம் தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிரசாரம் செய்த போது, விதிமீறல் நடந்ததாக உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்த போலீசா ருக்கு, தேடப்படும் குற்றவாளி ஒரு வர் முதல்வருடன் இருப்பது தெரிய வில்லையா? பிரசாரத்துக்கு பள்ளி குழந்தைகளை அழைத்து வந்த அமைச்சர் கீர்த்தனா மீது என்ன நட வடிக்கை எடுக்கப்பட்டது? தி.மு.க., ஆட்சியை விட குறைந்த விலையில் பருப்பு வாங்கியதாக கூறுகின்றனர். ஆனால், பாமாயில் விலை 15 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த லஞ்சப்பணம் எந்த கட்சிக்கு நிதியாக கொடுக்கப்பட்டது? இன்பதுரை: தாராபுரத்தில் முதல்வர் விஜய் பயணித்த மாட்டு வண்டியை, போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டி வந்தவர், போலீசாரால் மேற்கண்ட வழக் கில் தேடப்படும் அசோக் என தகவல் வெளியாகி உள்ளது.ஒரு வழக்கில் போலீசாரால் தேடப் படுபவரை, உள்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் விஜய் பய ணித்த மாட்டு வண்டியை ஓட்ட அனுமதித்தது எப்படி? இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.