Latest News
August 18, 2026 11:01 AM
முத்துப்பேட்டை தமிழ் இலக்கிய மன்ற ஆண்டு விழா மாணவர்களுக்கு பாராட்டு
முத்துப்பேட்டை தமிழ் இலக்கிய மன்ற ஆண்டு விழா மாணவர்களுக்கு பாராட்டு
முத்துப்பேட்டை, ஆக. 18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ் இலக்கிய மன்றத்தின் 39வது ஆண்டு விழா, இந்திய தேசத்தின் 80-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதற்கு தலைவர் ராம்மோகன் தலைமை வகித்தார். கௌரவ தலைவர் ராசமோகன், கல்வியாளர்கள் முஸ்தபா, பாலசுப்பிரமணியன், ஓய்வுபெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் சிவபாஸ்கர் ரோட்டரி சாசன தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செயலாளர் நந்தகுமார் வரவேற்று பேசினார். பொருளாளர் சாமிநாதன் பொருளாதார அறிக்கை வசித்தார். ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் செல்வசிதம்பரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பசீர் அகமது சுதந்திர தின கவிதை வசித்தார்.
தொடர்புடைய செய்திகள்
Latest News