📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 18, 2026 11:04 AM

பாகிஸ்தான் டெஸ்ட்டில் இந்திய ஜாம்பவான் சச்சினின் மெகா டெஸ்ட் சாதனையை ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பு

பாகிஸ்தான் டெஸ்ட்டில் இந்திய ஜாம்பவான் சச்சினின் மெகா டெஸ்ட் சாதனையை ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பு

பாகிஸ்தான் டெஸ்ட்டில் இந்திய ஜாம்பவான் சச்சினின் மெகா டெஸ்ட் சாதனையை ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பு

ஹெடிங்லே: பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை ஜோ ரூட் மீண்டும் கேப்டனாக வழிநடத்தவுள்ளார். புதன்கிழமை லீட்ஸ் ஹெடிங்லே மைதானத்தில் தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில், ஜோ ரூட் பேட்டிங்கில் பல உலக சாதனைகளை முறியடிக்கப் வாய்ப்பு உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். நாளை தொடங்கும் போட்டியில் அவர் இன்னும் 42 ரன்கள் எடுத்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் கேப்டனாக 3,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார். தற்போது அவர் கேப்டனாக 33 போட்டிகளில் விளையாடி 2,958 ரன்கள் எடுத்துள்ளார்.

இது தவிர, சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற ஜோ ரூட்டுக்கு இன்னும் 167 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது வரை 390 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 22,833 ரன்கள் குவித்துள்ளார். இச்சாதனையை எட்டினால் சர்வதேச அளவில் 23,000 ரன்களைக் கடந்த ஒட்டுமொத்த 8-வது வீரராக ரூட் உருவெடுப்பார்.

அதேபோல், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் (68 அரைசதங்கள்) சாதனையை முறியடிக்க ரூட்டுக்கு இன்னும் இரண்டு அரைசதங்கள் தேவை. தற்போது ரூட் 67 அரைசதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும், சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை (7,578 ரன்கள்) முறியடிக்க ரூட்டுக்கு இன்னும் 79 ரன்கள் தேவைப்படுகிறது.

தற்போது இங்கிலாந்தில் விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகளில் ரூட் 7,500 ரன்கள் எடுத்துள்ளார். ஜோ ரூட் ஏற்கனவே 2019 முதல் 2022 வரை இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.