நாம் சும்மா சென்னைக்கு விளையாட வரவில்லை.. துலீப் கோப்பைக்கு முன் இசான் கிஷன் பேச்சு
நாம் சும்மா சென்னைக்கு விளையாட வரவில்லை.. துலீப் கோப்பைக்கு முன் இசான் கிஷன் பேச்சு
சென்னை: துலீப் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னதாக, ஈஸ்ட் ஜோன் கேப்டன் இஷான் கிஷான் தனது அணியினருக்கு ஆற்றிய உத்வேகமளிக்கும் உரையின் பின்னணி காட்சிகளை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. ஜார்க்கண்ட் விக்கெட் கீப்பரான இஷான் கிஷான், தாங்கள் சேப்பாக்கத்திற்கு வெறுமனே பங்கேற்க வரவில்லை என்றும், சவுத் ஜோனுக்கு எதிரான இந்தப் போட்டியில் தங்களது 'முத்திரையை பதிக்க வேண்டும்' என்றும் தனது சக வீரர்களிடம் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற போட்டியில், கேப்டன் இஷான் கிஷான் 135 பந்துகளில் ஆட்டமிழக்காமல் எடுத்த 111 ரன்களின் உதவியோடு ஈஸ்ட் ஜோன் அணி இதனைச் செய்து காட்டியுள்ளது. உள்ளூர் கிரிக்கெட் அனுபவ வீரர் அபிமன்யு ஈஸ்வரன் 72 ரன்கள் மற்றும் இளம் திறமைசாலி வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்கள் ஆகியோர் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
தொடர்ந்து 21 வயதான ஷிகர் மோகன் 85 ரன்கள் எடுத்து அசத்தினார். இஷான் கிஷான் மற்றும் மற்றொரு விக்கெட் கீப்பரான குமார் குஷாக்ரா 63 ரன்கள் ஆகியோரின் ஆட்டத்தால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் ஜோன் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்துள்ளது.
அந்த வீடியோ, "நண்பர்களே, இதுவரை நாம் உண்மையிலேயே மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்," என்று இஷான் கிஷான் மைதானத்தில் அணியினர் பேசியுள்ளார். "இரண்டு போட்டிகள் முடிந்துவிட்டன. நாம் நன்றாக விளையாடியுள்ளோம். இதுதான் கடைசி போட்டி. ஒரு அணியாக நாம் இந்தப் போட்டியில் நமது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
இது இறுதிப் போட்டி, ஆனால் நாம் இங்கு வெறுமனே பங்கேற்க வரவில்லை. நாம் வெற்றி பெறவே வந்துள்ளோம். அதற்கு நாம் நமது திறமையை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். கடுமையான வெயில் இருக்கும், ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் பல சவால்கள் இருக்கும். எனவே, அதே ஆற்றலையும் திறமையையும் தொடர்ந்து பராமரிப்போம். நமது பந்துவீச்சாளர்களுக்கு நம்மால் இயன்றவரை முழு ஆதரவை வழங்க வேண்டும், அதேபோல் ஃபீல்டிங்கிலும் நமது சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும்."
அண்மையில் ஜார்க்கண்ட் அணியை தங்களது முதல் சையத் முஷ்டாக் அலி கோப்பை வெற்றிக்கு வழிநடத்திய இஷான் கிஷானின் கேப்டன்ஷிப் பொறுப்பு, அவரது சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதாகத் தெரிகிறது. அவரது இந்த உரை, அவர் அணியை எவ்வாறு திறம்பட வழிநடத்துகிறார் என்பதை உணர்த்துகிறது. "எனவே, தொடக்கத்திலிருந்தே முடிவைப் பற்றி கவலைப்படாமல், சரியான விஷயங்களைச் செய்வோம். அனைத்தையும் சரியாகச் செய்துவிட்டு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்று அவர் கூறினார்.