நான் சபிச்சது உண்மைதான்.. துரோகம் செஞ்சா தண்டனை கிடைக்கும்.. நாஞ்சில் விஜயனுக்கு வைஷூ பதிலடி!
சென்னை : நடிகர் நாஞ்சில் விஜயன் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக இனஸ்டாகிராமில் ஸ்டோரியில் போட்டு இருந்தார். மேலும், திருநங்கை சகோதரி வைஷ்ணவியிடம் நான் தோற்றுவிட்டேன். என்னையும், உங்களை தொடர்புபடுத்தி பல விமர்சனங்கள் வந்த போதும், மனைவி என்னுடன் உறுதியாக இருந்ததால், நான் அதைப்பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை. ஆனால், ஒரு சிறிய சண்டையால், என் மனைவியை பிரிந்து விட்டேன். இந்த செய்தி உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என நம்புகிறேன். திருநங்கை சாபம் உன்னை சும்மா விடாது என சிலர் கமென்ட் செய்கிறார்கள் வேதனையுடன் பகிர்ந்து பகிர்ந்து இருந்தார்.
வைஷ்ணவி வீடியோ: இதுகுறித்து நடிகை வைஷ்ணவி வெளியிட்டு இருக்கும் வீடியோவில், நாஞ்சில் விஜயன் போட்ட பதிவில் என்னுடைய சாபத்தால் மனைவியை பிரிந்துவிட்டதாக சொல்லி இருந்தார். நான் கும்பிடும் கடவுள் மீது சத்தியமாக சொல்கிறேன். நான் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடினே. கணவன்-மனைவி பிரிய வேண்டும் நான் ஒருபோதும் சபிக்க வில்லை. நான் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றதும் சரி, உங்களிடம் கேட்டதும் சரி எல்லாமே என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் செய்தார். நீங்க ரெண்டு பேரும் பிரிந்து போக வேண்டும் என நான் சத்தியமாக எதையும் செய்யவில்லை.
நியாயம் கிடைத்துவிட்டது: நான் இதையெல்லாம் நான் பிக்பாஸுக்காகத்தான் செய்தேன் என்று சொல்லி இருக்கீங்க, உண்மையை சொல்கிறேன். எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கால் வந்தது. நான் போகலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இந்த போஸ்ட்டை பார்த்த பிறகு போக வேண்டாம் என முடிவு எடுத்திருக்கிறேன். நான் பிக்பாஸுக்கு போகவே இல்லை. நான் பிக்பாஸுக்கு போயிருந்தால் கூட எனக்கு நியாயம் கிடைத்திருக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது இந்த விஷயத்தில் எனக்கு நியாயம் கிடைத்து இருக்கு. உண்மை என்ன என்பதை நீங்களே ஒத்துக்கொண்டீங்க.
துரோகம் செய்யாதீங்க: கடவுள் ரூபத்தில் எனக்கு ஏதோ ஒரு நல்லது நடந்து இருக்கு. இதற்கு மேலயாவது என்னை நிம்மதியா வாழ விடுங்க, என்னை அசிங்கப்படுத்தி கேவலப்படுத்துனது எல்லாம் போதும், எனக்கு இப்போ ஷூட்டிங் கூட இல்ல, எதுவுமே எனக்குகிடைக்கக்கூடாதுனு அப்படியே முடக்கிவிட்டீங்க. உங்களுடைய ப்ரோமோஷனுக்காக நீங்க என்ன வேண்டுமானாலும் பண்ணுவீங்கனு எனக்கு தெரியும். இப்பவும் உங்களுடைய சீப்பான புத்தியால் தான் இந்த விஷயத்திலும் என்னால் தான் குடும்பம் பிரிந்ததுனு சொல்றீங்க, நான் உங்களை சபித்தது உண்மை தான். ஆனால், கணவன் மனைவி பிரிந்து போக வேண்டும் என நான் நினைக்கவே இல்லை. நீங்க செய்த தவற நீங்க உணரவேண்டும் என்று தான் நினைத்தேன் நீங்க பிரிந்து போக வேண்டும் என நான் நினைக்கவில்லை. தயவு செய்து யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க, நம்புனவங்களுக்கு துரோகம் செய்தால் இந்த தண்டனை தான் கிடைக்கும் என வைஷ்ணவி இந்த வீடியோவில் பேசி உள்ளார்.