📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 28, 2026 05:04 PM

"நாங்க பட்டாணி சாப்பிடவா வந்திருக்கோம்? வாங்க ராஜினாமா பண்ணுவோம்"

"நாங்க பட்டாணி சாப்பிடவா வந்திருக்கோம்? வாங்க ராஜினாமா பண்ணுவோம்"

"நாங்க பட்டாணி சாப்பிடவா வந்திருக்கோம்? வாங்க ராஜினாமா பண்ணுவோம்"- கொந்தளித்த சென்னை பாஜக கவுன்சிலர்

ராஜா அன்பழகனின் கருத்தை ஆமோதித்து பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், ''நாம் என்ன பட்டாணி சாப்பிடவா இங்கே வந்திருக்கிறோம்? நிதியை விடுவிக்கவில்லையென்றால் அனைவரும் ராஜினாமா செய்வோம்'' என்றார்.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் 'கூண்டோடு ராஜினாமா செய்வோம்' எனப் பேச பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் அதை ஆதரித்து பேசினார்.

நேரமில்லா நேரத்தின்போது குறுக்கே எழுந்து பேசிய கவுன்சிலர் ராஜா அன்பழகன், "பருவமழை நெருங்கும் காலத்தில் மக்கள் பணிகளுக்கான நிதியை விடுவிக்காமல் இந்த அரசு வஞ்சிக்கிறது. திட்டங்களைச் செயல்படுத்தாமல் நாம் ஏன் இங்கே வர வேண்டும். திமுகவினர் அனைவரும் ராஜினாமா செய்வோம். மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்காகப் பணி செய்வது ஒன்றும் திமுகவினருக்குப் புதிதல்ல" என்றார்.

ராஜா அன்பழகனின் கருத்தை ஆமோதித்து பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், ''நாம் என்ன பட்டாணி சாப்பிடவா இங்கே வந்திருக்கிறோம்? நிதியை விடுவிக்கவில்லையென்றால் அனைவரும் ராஜினாமா செய்வோம். நாம் என்ன எம்.எல்.ஏக்களைப் போல இன்னோவா கார் கேட்டோமா? முதல்வரின் அறையில் அதிகாரிகளுக்கு முறையாக இடமில்லை என அமைச்சர் ஆதவ் கூறுகிறார். முதல்வரின் அறையைப் புதிய இடத்துக்கு மாற்றுகிறார்கள். அதற்கெல்லாம் பணம் இருக்கிறது. மக்கள் பணி செய்ய வார்டு மேம்பாட்டு நிதியை விடுவிக்க முடியாதா?'' என்றார்.

திமுக கவுன்சிலர்கள் நே.சிற்றரசு, ராஜன் போன்றோரும் நிதியை விடுவிக்க சொல்லி ராஜினாமா செய்வோம் எனப் பேசினர்.