📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology August 04, 2026 07:00 PM

நடுவானில் குலுங்கிய டெல்லி விமானம்; பயணிகள் காயம்

நடுவானில் குலுங்கிய டெல்லி விமானம்; பயணிகள் காயம்

புதுடெல்லி: தாய்லாந்து நாட்டின் புக்கெட்டிலிருந்து டெல்லி விமான நிலையம் நோக்கி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) காலை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியாவின் ‘ஏஐ2379’ விமானம் மோசமான வானிலை காரணமாக நடுவானில் திடீரென்று குலுங்கியது.

இதன் காரணமாக தரையிறங்குவதற்கு முன்னதாக ஏர் இந்தியா விமானம் தனது உயரத்தை இழந்தது. இருப்பினும், விமானத்தை பத்திரமாக விமானிகள் தரையிறக்கினர்.

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியவுடன் காயமடைந்த பயணிகளும் விமான ஊழியர்களும் அவசர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் 10 பயணிகள், 2 விமான ஊழியர்கள் காயமடைந்தனர்.

“ஆகஸ்ட் 4ஆம் தேதி பூக்கெட்டிலிருந்து டெல்லி வந்த ‘ஏஐ2379’ விமானம், மோசமான வானிலை காரணமாக குலுங்கியது. இதனால், உயரத்தை இழக்க நேரிட்டது. இருப்பினும் டெல்லியில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது,” என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“பயணிகள், விமான ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். எவரும் மோசமாகப் பாதிக்கப்படவில்லை. சிறிய காயங்கள் ஏற்பட்ட பயணிகள் மட்டும் பரிசோதனை, சிகிச்சைக்காக விமான நிலைய மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்,” என்றார் அவர்.