நயன்தாராவுக்கு மகுடம் சூட்டிய பிரபு.. டாக்ஸிக் படத்துக்கு மட்டுமில்லை.. ‘ஹாய்’ புரமோஷனிலும் அசத்தல்!
சென்னை: பெங்களூருவில் நடைபெற்ற டாக்ஸிக் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு நயன்தாரா பங்கேற்ற நிலையில், மேடையிலேயே பொதுவாக எந்த புரமோஷனுக்கு போக மாட்டீங்க, இங்க வந்துருக்கீங்களே என்ன விசேஷம் என கேட்கப் பட, அதற்கு அதிரடியாக தனது ஸ்டைலில், பொதுவாகவே புரமோஷன்களில் பங்கேற்கும் அளவுக்கு நான் குட் கிடையாது. ஆனால், இங்கே வர ஒரே காரணம் யஷ் மட்டுமே.
அவரே போன் அடித்து வர வேண்டும் கண்டிப்பாக என்று சொல்லிவிட்டார். என்னாலும் மறுக்க முடியவில்லை என பேசிவிட்டு, யஷ் பற்றியும் அவருக்காக அவர் மனைவி செய்த தியாகத்தையும் கியாரா அத்வானியின் நடிப்புப் பற்றியும் நயன்தாரா அதிகம் பேசினார்.
கன்னட படத்துக்கு மட்டும் தான் புரமோஷன் பண்ணுவீங்களா? தமிழ் படங்களை கண்டுக்க மாட்டீங்களா என ட்ரோல்கள் குவிந்த நிலையில், கவின் உடன் நயன்தாரா 'ஹாய்' பட புரமோஷனுக்காக ஜீ தமிழுக்கு வந்துள்ளார். அதன் புரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
புரமோஷனுக்கு நோ சொல்லாத நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வந்த உடனே புரமோஷன்களுக்கு அதிகப்படியாக நோ சொல்லிக் கொண்டிருந்தார் நயன்தாரா. ஆனால், சமீப காலமாக அந்த பட்டம் எல்லாம் தேவையில்லை என தூக்கிப் போட்ட அவர், இன்ஸ்டாகிராமிலும் கணக்குத் தொடங்கி ரசிகர்களுடன் நல்லாவே கனெக்ட் ஆகி வருகிறார். மேலும், டாக்ஸிக், ஹாய் என தொடர்ந்து படங்களின் புரமோஷன்களில் பங்கேற்றும் வருகிறார்.
நயன்தாரா தயாரிப்பு: பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள ஹாய் படத்தை தயாரித்துள்ளதே நயன்தாரா தான். முன்னதாக கணவர் விக்னேஷ் சிவனுக்காக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை தயாரித்து அதன் புரமோஷனுக்கும் வந்திருந்தார். இந்நிலையில், தனது தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாய் படத்துக்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கவின் உடன் ஒரு கலக்கலான கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
மகுடம் சூட்டிய பிரபு: பிக் பாஸ் புகழ் அர்ச்சனா தொகுத்து வழங்கிய ஹாய் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் விசிட்டாக நடிகர் பிரபு கலந்துக் கொண்டார். சந்திரமுகி படத்தில் இருந்து நயன்தாராவின் உழைப்பையும் வளர்ச்சியையும் பார்த்து பிரம்மித்துப் போயுள்ளேன் என பாராட்டிய அவர் மகுடத்தையும் நயன்தாராவுக்கு சூட்டி அழகு பார்த்தார். ஹாய் படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தித்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாத இறுதியில் ஆகஸ்ட் 26ம் தேதி டாக்ஸிக் மற்றும் 28ம் தேதி ஹாய் என அடுத்தடுத்து 2 வெயிட்டான ட்ரீட்டை நயன்தாரா தனது ரசிகர்களுக்காக கொடுக்க காத்திருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.