📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 06, 2026 04:03 PM

ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வுகோரி போராட்டம்

ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வுகோரி போராட்டம்

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், தொடர் வேலை மற்றும் ஊதிய உயர்வு-கோரி, நேற்று பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடு-பட்டனர்.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தனியார் நிறுவனம் மூலம், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்கள் காலை, மதியம், இரவு என மூன்று ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில், ஒவ்வொரு ஷிப்டுக்கும் பணிக்கு வரும் துாய்மை பணியாளர்களில், 20 பேருக்கு வேலை இல்லை என நிறுவனத்தின் மேலாளர் வீட்டிற்கு திருப்பி அனுப்புவதாக குற்றச்-சாட்டு எழுந்தது.

இதனால், அன்றைய தினத்திற்கான கூலி கிடைக்காமல் பணியா-ளர்கள் தவித்து வந்தனர். வேலைக்கு வரும் துாய்மை பணியாளர்-களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை கண்டித்தும், பல்-வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், நேற்று காலை துாய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து, மருத்துவ-மனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம், 1:00 மணி வரை போராட்டம் நீடித்தது.

இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் மனோகர், மருத்துவ கண்காணிப்பாளர் சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் நாகவேந்தன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், கோரிக்கைகள் குறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து நேற்று மதியம், 1:30 மணிக்கு துாய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்பினர்.