📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 19, 2026 10:33 AM

ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்திக் கொண்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்திக் கொண்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்திக் கொண்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர் - முரளி கார்த்திக்.. வர்ணனையில் சர்ச்சை

மும்பை: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது, கமெண்டரி பாக்ஸில் முன்னாள் இந்திய வீரர்கள் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் முரளி கார்த்திக் ஆகியோர் நேரலையிலேயே ஒருவரையொருவர் மோசமாக கிண்டலடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆட்டத்தின் இடைவேளையின் போது கமெண்டரி பாக்ஸில் இருந்த முரளி கார்த்திக், சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் முக பாவனையைக் கிண்டலடித்துப் பேசத் தொடங்கினார். அவர் பேசுகையில், "உங்களுக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த 'பவுட்' முகம் இருக்கிறது. ஆனால், உங்கள் முக பாவனையால் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எங்களுக்குப் புரிவதில்லை. தயவுசெய்து அதை சற்று குறைத்துக் கொள்ளுங்கள்" என்று நேரலையிலேயே கூறினார்.

இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த மஞ்ச்ரேக்கர், "கேமரா கோணத்தை மாற்றி முகலட்சணம் உடைய வேறு யாரிடமாவது காட்டுங்கள். முரளி கார்த்திக் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு தன்னைத்தானே 'சூப்பர், சூப்பர்' என்று பாராட்டிக் கொள்வார் என்று நினைக்கிறேன்" என்றார். அதற்கு முரளி கார்த்திக், "நான் கண்ணாடி பார்ப்பதே இல்லை. அது நீங்கள் தான். உங்களுடன் விளையாடியவர்களுக்கும், பணிபுரிந்தவர்களுக்கும் உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும்" என்று பதிலடி கொடுத்தார்.

மேலும் ஆவேசமடைந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "நான் கண்ணாடி பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் உங்களைப் போன்றவர்களுக்கு கண்ணாடி முன்னால் நிற்பதற்கு எந்த உந்துதலும் இருக்காது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நாம் இருவரும் எல்லை மீறிப் பேசுகிறோம், சமூக வலைதளங்களில் இது பெரிய அளவில் விவாதிக்கப்படும்" என்று சிரித்துக் கொண்டே அந்த விவாதத்தை முடித்துக் கொண்டார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி இலங்கைக்கு 372 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது. 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்துத் திணறி வருகிறது. ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த நிலையில், கமெண்டரி பாக்ஸில் நடந்த இந்த சர்ச்சை வீடியோ பரவி வருகிறது.