📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 28, 2026 09:00 AM

பாசம், தியாகம், பாதுகாப்பு... அண்ணன்

பாசம், தியாகம், பாதுகாப்பு... அண்ணன்

தமிழ் சினிமாவில் அண்ணன்-தங்கை, அக்கா-தம்பி பாசத்தை மையமாக வைத்து வெளியாகி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த 5 முக்கியமான திரைப்படங்களை பற்றி தற்போது பார்போம்.

1. திருப்பாச்சி (2005)

விஜய் மற்றும் மல்லிகா அண்ணன்-தங்கையாக நடித்த திரைப்படம் திருப்பாச்சி. திருமணமாகி சென்னை செல்லும் தங்கைக்கும் - கணவருக்கும் அங்குள்ள ரவுடிகளால் பிரச்சினை ஏற்பட அவர்களை ஒரு அண்ணன் வேட்டையாடி அழிப்பதே இத்திரைப்படத்தின் கதையாகும்.

2. வேதாளம் (2015)

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் லட்சுமி மேனன் அண்ணன்-தங்கையாக நடித்த திரைப்படம் வேதாளம். தமக்கு உதவி செய்த பெண்ணை தனது சொந்த தங்கையாக ஏற்றுக்கொள்ளும் அண்ணன், அவருக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்க போராடுகிறார். அண்ணன்-தங்கை பாசத்துடன் அதிரடி காட்சிகளும் நிறைந்த இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

3. நம்ம வீட்டுப் பிள்ளை (2019)

சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன்-தங்கையாக நடித்த திரைப்படம் நம்ம வீட்டுப் பிள்ளை. பாண்டிராஜ் இயக்கிய இப்படம் குடும்ப உறவுகளையும் பாசத்தையும் மையமாக கொண்டது. வளர்ப்புத் தங்கையின் மகிழ்ச்சிக்காக தனது சொந்த ஆசைகளையும் விட்டுக்கொடுத்து, அவருக்கு துணையாக நிற்கும் அண்ணனின் பாசத்தை இப்படம் அழகாக வெளிப்படுத்தியது.

4. சிவப்பு மஞ்சள் பச்சை (2019)

சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை. பெற்றோர் இல்லாமல் வளரும் அக்கா-தம்பியின் பாசத்தையும், அவர்களுக்குள் இருக்கும் ஆழமான பிணைப்பையும் இப்படம் பேசுகிறது.

5. கடைக்குட்டி சிங்கம் (2018)

ஐந்து அக்காக்களுக்கு செல்ல தம்பியாக கார்த்தி நடித்த திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். பெரிய கூட்டுக் குடும்பத்தில் அக்காக்களின் அன்பு, அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க தம்பி ஏற்கும் பொறுப்பு ஆகியவற்றை இப்படம் மையமாக கொண்டது. பாண்டிராஜ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்பட்டது.

அண்ணன்-தங்கை, அக்கா-தம்பி பாசம் என்றாலே தமிழ் சினிமாவில் இந்தப் படங்கள் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும் முக்கியமான படங்களாக உள்ளன.