பாகிஸ்தான் பேட்டிங் கிங் பாபர் அசாம்.. ஆனால் பவுலர்கள் கூடத்தான் போட்டி போடுவார்.. மோசமான சாதனை
பாகிஸ்தான் பேட்டிங் கிங் பாபர் அசாம்.. ஆனால் பவுலர்கள் கூடத்தான் போட்டி போடுவார்.. மோசமான சாதனை
லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாம் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து பல ஆண்டுகள் ஆகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம், பேட்டிங்கில் பந்துவீச்சாளர்கள் அதிகம் இடம் பெற்றுள்ள ஒரு மோசமான சாதனைப் பட்டியலில் பாபர் அசாம் இணைந்துள்ளார். இதை அடுத்து பாகிஸ்தானின் கிரிக்கெட் கிங் என பில்டப் செய்யப்படும் பாபர் அசாம் பேட்டிங் செய்வதில் பவுலர்கள் கூடத்தான் பாபர் அசாம் போட்டி போடுவார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 110 ரன்களுக்கு சுருண்டது. இதில் பாபர் அசாம் 10 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஜோஷ் டங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் கடந்த 2023 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் பாபர் அசாம் விளையாடிய இன்னிங்ஸ்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, 2023 முதல் டெஸ்டில் சதம் அடிக்காமல் அதிக இன்னிங்ஸ்கள் விளையாடிய வீரர்கள் பட்டியலில் பாபர் அசாம் இணைந்துள்ளார். இப்பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் (50), பேட் கம்மின்ஸ் (47), முகமது சிராஜ் (44), நாதன் லியான் (41) போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் முதலிடத்தில் உள்ளனர். தற்போது பாபர் அசாம், பிரபாத் ஜெயசூரியா மற்றும் தைஜுல் இஸ்லாம் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் 36 இன்னிங்ஸ்களுடன் 5வது இடத்தை பகிர்ந்துள்ளார். ஒரு முழுநேர பேட்ஸ்மேனான பாபர் அசாம் அதிகம் பேட்டிங் செய்யத் தெரியாத பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இணைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
முன்னாதாக, பாகிஸ்தான் அணியில் அசான் அவாய்ஸ் மட்டுமே ஓரளவுக்கு போராடி 46 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஓலி ராபின்சன் 4 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 180 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 2வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணி 261 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.