பால் கொள்முதல் விலை மேலும் உயர்வு.. முதல்வர் விஜய் அறிவிப்பு
பால் கொள்முதல் விலை மேலும் உயர்வு.. முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: பால் கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, மொத்தமாக ரூ.44-ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக பேரவையில் பேசிய முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக முதல்வர் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே சமீபத்தில் பால் கொள்முதல் விலை ரூ.38-ல் இருந்து ரூ.41-ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.பால் கொள்முதல் விலை உயர்வால் மாதம் ரூ.60 கோடி, ஆண்டுக்கு ரூ.720 கோடி கூடுதல் செலவு அரசுக்கு ஏற்படும் என்றார்.
தொடர்ந்து 10 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், ரூ.33,000 கோடியில் மின்தொடரமைப்பு மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 15,000 கிலோ மீட்டருக்கு மின் பாதைகள் அமைக்கப்படும். 196 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். தூத்துக்குடியில் அரசு, தனியார் பங்களிப்புடன் ரூ.20,800 கோடியில் புதிய உற்பத்தி மின்நிலையம் அமைக்கப்படும். மேலும் ரூ.1,762 கோடியில் சென்னை மின் பகிர்மான மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். மதுரமங்கலத்தில் ரூ.175 கோடியில் செமிகன்டக்டர் பூங்கா அமைக்கப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.