📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 31, 2026 06:01 PM

விரைவில் ஹீரோவாகும் ஜேசன் சஞ்சய்...? யார் தயாரிப்பாளர் தெரியுமா?

விரைவில் ஹீரோவாகும் ஜேசன் சஞ்சய்...? யார் தயாரிப்பாளர் தெரியுமா?

விரைவில் ஹீரோவாகும் ஜேசன் சஞ்சய்...? யார் தயாரிப்பாளர் தெரியுமா?

முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், அவர் கதாநாயகனாகவும் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘சிக்மா’ படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், தமன் இசையமைத்துள்ளார். லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒரு சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சயும் இடம்பெற்றுள்ளார்.

திரைப்படத் தயாரிப்பு மற்றும் திரைக்கதை தொடர்பான படிப்புகளை வெளிநாட்டில் முடித்துள்ள ஜேசன் சஞ்சய், சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே தற்போது ‘சிக்மா’ மூலம் முழுநீள திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த நிலையில், இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய், விரைவில் கதாநாயகனாகவும் திரையில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் அவரது நடிப்பு அறிமுகம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சிக்மா’ படத்தை தயாரிக்கும் நிறுவனத்துடன் தொடர்புடைய ஜி.கே.எம். தமிழ்குமரனே, ஜேசன் சஞ்சயின் ஹீரோ அறிமுகப் படத்தையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், முதலில் இயக்குநராகவும், தொடர்ந்து கதாநாயகனாகவும் திரையுலகில் தனது பயணத்தை அமைத்துக்கொள்ளும் ஜேசன் சஞ்சயின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.