📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 11, 2026 05:04 PM

பேசாமலே செயல்படுவேன் என்பது வரவேற்கத்தக்கது தான்; சட்டசபையில் முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கோரிக்கை

பேசாமலே செயல்படுவேன் என்பது வரவேற்கத்தக்கது தான்; சட்டசபையில் முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கோரிக்கை

சென்னை: 'பேசாமலே செயல்படுவேன் என்பது வரவேற்கத்தக்கது தான்; ஆனால், சில நேரங்களில் பேசினால் தான் தீர்வு கிடைக்கும்' என முதல்வர் விஜய்க்கு சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து சட்டசபையில் இபிஎஸ் பேசியதாவது; முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது, அப்போதைய முதல்வரை பார்த்து, மத்திய அரசுக்கு பல்வேறு பிரச்னைகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா என்று கேட்டீர்கள். தற்போது அதே பாணியை தான் இந்த அரசு கடைபிடிக்கிறது. ஆகவே கடிதம் எழுதினால் மட்டும் மத்திய அரசு திட்டத்தை கொடுத்து விடாது.

அதற்கு உண்டான தீர்வை காண்பதற்கான முயற்சியும் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன். பேசாமலே செயல்படுவேன் என்பது வரவேற்கத்தக்கது தான்; ஆனால் சில நேரங்களில் பேசினால் தான் தீர்வு கிடைக்கும். இனிமேல் பேசி, தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.