📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 01, 2026 03:04 AM

பெண்களுக்கு போக்குவரத்து சுதந்திரம் தேவை!

பெண்களுக்கு போக்குவரத்து சுதந்திரம் தேவை!

2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை. சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

போக்குவரத்து சுதந்திரம்

இந்நிலையில் சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி பேசுகையில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், கிராமப்புறங்களுக்கு போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மினி பேருந்து சேவைகளையும் அதிகரித்து, பெண்களுக்கு போக்குவரத்து சுதந்திரத்தை வழங்க வேண்டும்.

அரசின் கடமை

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.