📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 19, 2026 12:35 PM

'பெரம்பூரில் ரூ.300 கோடியில் மருத்துவமனை; பால் கொள்முதல் விலை உயர்வு!'

'பெரம்பூரில் ரூ.300 கோடியில் மருத்துவமனை; பால் கொள்முதல் விலை உயர்வு!'

'பெரம்பூரில் ரூ.300 கோடியில் மருத்துவமனை; பால் கொள்முதல் விலை உயர்வு!' - முதல்வரின் அறிவிப்புகள்

சட்டமன்றக் கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகளின் அப்டேட்ஸ்

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் கொடுத்த அறிவிப்புகள்

தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.38 லிருந்து ரூ.41 ரூபாயாக கொள்முதல் விலை உயர்வு.

வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.

செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களை உருவாகும் வகையில் அரசு மருத்துவமனைகளில் ரூ.351 கோடி மதிப்பில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு தொகை ஆண்டுக்கு 5 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தப்படும்.

திருநங்கையர்களுக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, தருமபுரி, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கபடும்.