பக்தியில் மூழ்கிய திரை பிரபலங்கள்.. த்ரிஷா முதல் தர்ஷா குப்தா வரை விநாயகர் சதுர்த்தி போட்டோஸ்!
சென்னை: முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்தார். இந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் செப்டம்பர் 14ந் தேதியான இன்று விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டன. வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் மக்கள், விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், அவல், பொரி, பழங்கள் போன்றவற்றை படைத்து பூஜைகள் செய்கின்றனர்.
Missing Home: அந்த வகையில் திரையுலகத்தை சேர்ந்த பிரபல நட்சத்திரங்களும் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை மிக கோலாகலமாகக் கொண்டாடி, அந்த அழகான தருணங்களின் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நடிகை த்ரிஷா தற்போது லண்டனில் இருப்பதால், "Missing home extra today" என பதிவிட்டு. பண்டிகை நாளில் தனது வீட்டை மிகவும் மிஸ் செய்வதாக பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புன்னகையோடு வாழ்த்துக்கள்: நடிகை சினேகா, அழகான நீல மற்றும் பச்சை நிற பட்டுடையில், மஞ்சள் மற்றும் எருக்கம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு முன்னால் அகல் விளக்கேற்றி, புன்னகையோடு விநாயகரை வழிபாட்டு தனது ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறியுள்ளார்.
வாழ்த்துக்கள்: நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, அழகிய இளஞ்சிவப்பு பட்டுப் புடவையில் தனது பூஜை அறையில் விநாயகருக்கு பழங்கள், பொரி, கொழுக்கட்டை மற்றும் பூக்களை படைத்து சிறப்பு வழிபாடு செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரது இந்த நேர்த்தியான மற்றும் பக்திமயமான லுக் சோஷியல் மீடியாவில் லைக்குகளைக் குவித்து வருகிறது.
நடிகை தர்ஷா குப்தா, நீல நிற புடவையில் விநாயகர் சிலை முன் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்து கொண்டு இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும், விநாயகப் பெருமானின் அருள் தடைகளை நீக்கி வெற்றி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களை வழங்கட்டும். அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.