📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 16, 2026 09:02 AM

பன்முக ஆளுமை வைகறை வாணன்! | அஞ்சலி

பன்முக ஆளுமை வைகறை வாணன்! | அஞ்சலி

வைகறை வாணன்

“புனல்​சூழ் மணல் தோப்​பின் குயில் கூட்​டம் நாங்​கள்” எனத் தன் சுற்​றத்​தை​யும் நட்​பை​யும் பெரு​மிதத்​துடன் குறிப்​பிட்ட வைகறைக் குயி​லின் கூவல் ஓய்ந்​து​விட்​டது. கொள்​ளிடம் ஆற்​றின் மணல் திட்​டில் அமைந்த இராமநல்​லூர் எனும் சிற்​றூரில் பிறந்த வைகறை, திரு​வை​யாறு அரசர் கல்​லூரி​யில் புல​வர் பட்​டம் பெற்​றவர்; பழந்​தமிழ் அறிஞர் தி.வே. கோபாலய்​யரிடம் பாடம் கேட்ட பெரு​மைக்​குரிய​வர்.

சென்​னைக்​குச் சென்று அச்​சுத் தொழிலில் தடம் பதித்​தார். அவர் தங்​கி​யிருந்த கோடம்​பாக்​கம் இல்​லம், இலக்​கிய​வா​தி​களுக்​கும் இடது​சாரி இயக்​கத்​தினருக்​கும் உறை​விட​மாகத் திகழ்ந்​தது. ‘இராசகிளி பிரிண்​டர்​ஸ்’ அச்​சகத்​தின் வழியே பல நூல்​களை வெளி​யிட்​ட​வர்; ‘கார்க்கி நூல​கம்’ பதிப்​பகத்​தின் மூலம் வி.பி. சிந்​தன் போன்ற இயக்க அறிஞர்​களின் படைப்​பு​களை​யும், கே. டானியலின் ‘கோ​விந்​தன்’ நாவலை​யும் பதிப்​பித்​தார்.

இதோடு அரசு ஊழியன், மக்​கள் செய்​தி, பாலம், சங்​கொலி, நக்​கீரன், போர்​வாள், குமுதம் போன்ற இதழ்​களி​லும் பணிபுரிந்​தார். கு.கைலாசம், கி.பி. அரவிந்​தன், செந்​தலை கவுதமன், சி.அறி​வுறு​வோன், காக்கைச் சிறகினிலே முத்​தை​யா, பொதிய​வெற்பன், கவிஞர் குருவிக்கரம்பை சண்​முகம், ஓவியர்கள் சிற்பி தனபால், ஆதி​மூலம், வீர. சந்​தானம், மருது, பேராசிரியர்கள் கா. சிவத்​தம்பி, வீ.அரசு, இளவரசு எனப் பலதரப்​பட்ட ஆளுமை​களு​டன் நெருங்​கிய பிணைப்​புக் கொண்​டிருந்​தார்.