📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 24, 2026 09:05 PM

போதையில் வாகனம் ஓட்டிய ஆடவர் கைது

போதையில் வாகனம் ஓட்டிய ஆடவர் கைது

போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதற்காக 33 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) அதிகாலை அங் மோ கியோவில் நிகழ்ந்த விபத்துக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் புவாங்கொக் கிரீனை நோக்கிய அங் மோ கியோ அவென்யூ 5 பகுதியில் ஒரு காரும் டாக்சியும் ஈடுபட்ட விபத்து குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததென ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அவரிடமிருந்து ஒரு மின்சிகரெட்டும் மின்சிகரெட் தகடும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. மின்சிகரெட் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

விபத்தில் காயமடைந்த இருவர் கவனிக்கப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இருவரும் மருத்துவமனைக்குப் போக மறுத்துவிட்டனர்.

விசாரணை தொடர்வதாகக் காவல்துறையினர் கூறினர்.

விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கறுப்பு நிற கார் சாலையின் இரு தடங்களுக்கு நடுவே இருந்தது தெரிந்தது. அந்த காரின் முன்பகுதி பெரிய அளவில் சேதமடைந்தது அப்படத்தில் தெரிந்தது. சாலையில் சில பகுதிகள் சிதறிக் கிடந்தது காணப்பட்டது.