📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 06, 2026 11:30 AM

பட்ஜெட்டை மட்டும் படிங்க... அமைச்சருக்கு சபாநாயகர் அட்வைஸ்!

பட்ஜெட்டை மட்டும் படிங்க... அமைச்சருக்கு சபாநாயகர் அட்வைஸ்!

பட்ஜெட்டை மட்டும் படிங்க... அமைச்சருக்கு சபாநாயகர் அட்வைஸ்!

தமிழ்நாட்டின் 2026-27 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சருக்கு சபாநாயகர் கொடுத்த அட்வைஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசிக்கும் போது, முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசியதாக கூறி திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேளாண் துறை அமைச்சர் தமிழக சட்டசபையில் கோட் சூட் போட்ட விவசாயி,பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயகன் என்றெல்லாம் முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசிய போது திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதனை உடனே தடுத்து நிறுத்தும் வகையில் சபாநாயகர் ஜே.டி.பிரபாகர் பட்ஜெட்டை மட்டும் படிக்குமாறு அறிவுறுத்தினார்.

அமைச்சர், பட்ஜெட் உரையில் திட்டங்களை விளக்குவதற்கு முன்பு புகழுரை இடம்பெற்றதாக எதிர்க்கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் ஜே.டி. பிரபாகர் தலையிட்டு, "பட்ஜெட்டை மட்டும் படியுங்கள்" என்று அமைச்சருக்கு அறிவுறுத்தினார். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து அமைச்சர் வினோத் தனது உரையைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகளை வாசித்தார். மேலும், பச்சை நிற துண்டு அணிந்து பட்ஜெட்டை தாக்கல் செய்ததும் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது.