📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 10, 2026 08:03 PM

பூன் லே விபத்தில் சைக்கிளோட்டி மரணம்

பூன் லே விபத்தில் சைக்கிளோட்டி மரணம்

பூன் லேயில் நிகழ்ந்த சாலை விபத்தில் 51 வயது சைக்கிளோட்டி ஒருவர் மரணமடைந்தார்.

இதன் தொடர்பில் 72 வயது ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) காலை 6.40 மணியளவில் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் நோக்கிச் செல்லும் பூன் லே வேயில் விபத்து நிகழ்ந்தது.

பின்னர் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக 72 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட படத்தில் சைக்கிளின் முன்சக்கரம் நசுங்கியிருந்ததைக் காண முடிந்தது.

அதன் அருகில் வெள்ளைநிறக் கார் நிறுத்தப்பட்டிருந்தது.

ஏஷியாஒன் விளக்கம் கேட்டதற்கு பதிலளித்த காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகக் கூறின.

கைது செய்யப்பட்டுள்ள ஆடவர் காவல்துறையின் விசாரணையில் உதவி வருகிறார்.