📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 11, 2026 01:03 AM

ராகுல் காந்தி நிகழ்ச்சியில் மாணவர்களை வெளியேற விடாமல் தடுத்ததாகப் புகார்

ராகுல் காந்தி நிகழ்ச்சியில் மாணவர்களை வெளியேற விடாமல் தடுத்ததாகப் புகார்

மாணவர்களுடன் கலந்துரையாடுவதாகக் கூறும் ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் தனிப்பட்ட உரிமைகளையும் மதிக்க வேண்டிய பொறுப்பு இல்லை என்பதையே இந்நிகழ்ச்சி காட்டுகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் இன்று ராகுல் காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முயன்றபோது, காங்கிரசார் காவல்துறையினர் மூலம் அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியே செல்ல விடாமல் தடுத்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் கண்டனத்திற்குரியவை.

மாணவர்களின் குரலைக் கேட்பதாகக் கூறிக்கொண்டு, அவர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுவதுதான் காங்கிரஸ் கட்சியினருக்கு தெரிந்த ஜனநாயகமா? மாணவர்களுடன் கலந்துரையாடுவதாகக் கூறும் ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் தனிப்பட்ட உரிமைகளையும் மதிக்க வேண்டிய பொறுப்பு இல்லை என்பதையே இந்நிகழ்ச்சி காட்டுகிறது.

மாணவர்கள் என்பவர்கள் அரசியல் தலைவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டியவர்கள் அல்ல. அவர்கள் தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தவும், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவும், விரும்பினால் அதிலிருந்து வெளியேறவும் முழு உரிமை கொண்டவர்கள். அதை விடுத்து அவர்களின் விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயப்படுத்துவது ஜனநாயக மாண்புகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது.

மாணவர்களின் நலனுக்காகப் பேசுவதாகக் கூறும் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும், முதலில் மாணவர்களின் உரிமைகளையும் சுயமரியாதையையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மாணவர்களின் குரலை ஒடுக்கிவிட்டு, அவர்களுக்காகப் பேசுவதாக அரசியல் நாடகம் நடத்த முடியாது. அவர்கள் எந்த அச்சுறுத்தல்களுக்கோ, கட்டாயப்படுத்துதல்களுக்கோ ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.