ராம் அண்ட் லீலா பாக்ஸ் ஆபீஸ் ஓப்பனிங்.. கல்லா கட்டியதா ரியோவின் படம்? முதல் நாள் வசூல்!
சென்னை: ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ், வர்த்திகா, சேத்தன், மாளவிகா அவினாஷ், மா கா பா ஆனந்த், தீபா வெங்கட் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. படத்திற்கு பொதுமக்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் படத்தின் முதல் வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
ராம் அண்ட் லீலா படத்தின் கதை போல கடந்த சில மாதங்களுக்கு முன் 'டபுள் ஆக்குபன்சி' படம் வெளியானது. அதே படத்தை போலத்தான் ராம் அண்ட் லீலா படத்தின் கதையும் இருக்கிறது. அதாவது படத்தின் ஹீரோவான ரியோவிற்கு (ராம்) 30 வயதாகிம் திருமணமாகவில்லை. ஆனால், அம்மாவிற்கு எப்படியாவது மகனுக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால், ரியோ பார்க்கும் பெண்கள் இவரை ஏறெடுத்து பார்க்கவில்லை.
ராம் அண்ட் லீலா: அந்த நேரத்தில் மின்சார ரயிலில் லீலா சந்திக்க பார்த்தவுடன் இருவருக்கும் பிடித்து விடுகிறது. சில நாட்கள் இவர்கள் இருவரும் நட்பாக பழகி பின் காதலை வெளிப்படுத்துகின்றனர். இருவரும் காதலிக்கிறார்கள் ஆனால் லீலா , ராமிடம் ஒரு கண்டிஷன் போடுகிறாள் அதாவது,ஆறு மணிக்கு மேல என்னை எங்கேயும் கூப்பிடக்கூடாதுரு, என் வீட்டிற்கு நீ வரக்கூடாது ஃபோனும் செய்யக்கூடாது என கண்டிஷன் போடுகிறார். ஆரம்பத்தில் இதற்கு எல்லாம் ஓகே சொல்லும் ராம், ஒரு நாள் லீலாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு தான் செம ட்விட்ஸ் காத்து இருக்கிறது.
முதல் நாள் வசூல்: லீலா உட்பட அந்த குடும்பத்தில் உள்ள அனைவருமே வேற்று கிரகத்தை சேர்ந்த ஏலியன்கள் என்று தெரிய வருகிறது. ஆறு மணிக்கு மேல் லீலா ஆணாக மாறுவார் என்ற விஷயம் தெரிந்து ராம் அதிர்ச்சி அடைகிறார். அதன் பின் என்ன ஆனாது என்பது தான் படத்தின் மீதிக்கதை. கலகலப்பு நகைச்சுவை திரைப்படமாக இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.20 லட்சமாக உள்ளது. படத்திற்கு மக்களிடம் இருந்த நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதால் படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.