Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today Tamil (08.10.2026): புரட்டாசி மாதத்தின் 21ம் நாளான அக்டோபர் மாதத்தின் 8ம் தேதி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம்.
அக்டோபர் மாதத்தின் 8ம் தேதியான இன்று தேய்பிறை பிரதோஷமாகும். புரட்டாசி மாதத்தின் 21ம் நாளான இன்றைய தினத்தின் 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம்.
இன்றைய ராசிபலன்கள் (அக்டோபர் 08)
எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த வேறுபாடுகள் மறையும்.
தொழில் சார்ந்த கல்விகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். தொழில் நிமித்தமான பயணங்கள் கைகூடும். மனை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். சொந்த ஊர் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். உறவினர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கட்டிடப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சகோதரர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். மனை விருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபார ரீதியான புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறைமுகமாக இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் உருவாகும்.
வெளியூர் பயணங்களால் புதிய அனுபவங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். இழுபறியாக இருந்த தனவரவுகள் கிடைக்கும். கல்வி பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் மேம்படும். தானிய விற்பனையில் லாபம் மேம்படும்.
அரசு வழியில் இருந்த நெருக்கடி நீங்கும். மனதில் புதிய சிந்தனை மேலோங்கும். ஆதாயகரமான முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து செல்லும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும்.
எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனங்களால் சில விரயங்கள் உண்டாகும். வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். பயனற்ற கருத்துகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.
ஆரோக்கியம் சீராக இருக்கும். புத்தி சாதூர்யத்தால் சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். திட்டமிட்ட செயலை மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும்.
விருச்சிகம்
சமூக பணிகளில் மதிப்பும், மரியாதையும் உயரும். இழுபறியான சில வழக்குகள் முடிவுக்கு வரும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள்.
மனதை உறுத்திக் கொண்டே இருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே அனுசரித்து செல்லவும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். தொழிலில் இருந்துவந்த முடக்க நிலைகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
மனதில் இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் விவாதங்களை குறைத்துக்கொள்ளவும்.
வாழ்க்கைத் துணைவருடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பணி வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.
மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதுவிதமான ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை உருவாக்கும். எதிர்ப்புகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். உபரி வருமானம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். சந்தைப்படுத்தும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். மற்றவரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி