📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 31, 2026 07:01 PM

தாய்லாந்து தமிழ் பெண்ணுக்கு அமெரிக்க பல்கலைகழகம் அழைப்பு

தாய்லாந்து தமிழ் பெண்ணுக்கு அமெரிக்க பல்கலைகழகம் அழைப்பு

தாய்லாந்து தமிழ் பெண்ணுக்கு அமெரிக்க பல்கலைகழகம் அழைப்புதமிழகத்தில் உள்ள சிறுகூடல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இ பி அழகப்ப செட்டியார் லெட்சுமி ஆச்சி பேத்தியும், அவர்கள் புதல்வர் தாய்லாந்தில் வசிக்கும் சரவணன் தையல்நாயகி மகளுமான கீதாவை, அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு அருகில் உள்ள 112 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஜான்சன் & வேல்ஸ் பல்கலைகழகம், 100 சதவீதக் கல்வி கட்டண சலுகையுடன், பயோ மெடிகல் சயன்ஸ் இளங்கலை பட்டப் படிப்பு படிப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளது.சுமார் 80,000 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததில், கடுமையான போட்டித் தேர்வுகளில் வென்று, முதல் நான்கு பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதும், அதன் மதிப்பு நான்கு ஆண்டுகளுக்கான கட்டணத் தொகை 196,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் இரண்டு கோடி ரூபாய்) என்பதும் குறிப்படத் தக்கது.வளரும் தமிழ் பெண்ணான அவரது முயற்சியையும் மற்றும் அவரது கடுமையான உழைப்பிற்கு கிடைத்த இந்த வெற்றியையும் வாழ்த்துவது, வருங்காலத் தலைமுறைக்கு ஓர் எடுத்ததுக் காட்டாக இருக்கும் என்ற வகையில் தினமலரும் அதன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.