📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 27, 2026 11:03 PM

தேர்தல் கமிஷன் விளக்கத்தால் ராகுலின் நாடகம் அம்பலம்; தமிழக பா.ஜ., விமர்சனம்

தேர்தல் கமிஷன் விளக்கத்தால் ராகுலின் நாடகம் அம்பலம்; தமிழக பா.ஜ., விமர்சனம்

சென்னை: 'எஸ்.ஐ.ஆர்., குறித்த ராகுலின் நாடகம், இந்திய தேர்தல் கமிஷனின் விளக்கத்தால், அம்பலமாகி உள்ளது' என, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தொடர் தேர்தல் தோல்விகளால், விரக்தியின் விளிம்பில் உள்ள ராகுலும், எதிர்க்கட்சியினரும், காழ்ப்புணர்ச்சியால், இந்திய ஜனநாயக கட்டமைப்பு மற்றும் அரசியல் சாசன அமைப்புகள் மீது, அவதூறுகளை வாரி இறைக்கின்றனர்.

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி விவகாரத்தில், தேர்தல் கமிஷனர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தலைமை தேர்தல் கமிஷனர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகவும் அவதுாறு பரப்பினர். இதற்கு தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால், ராகுலின் நாடகம் அம்பலமாகி உள்ளது.

எஸ்.ஐ.ஆர்., தொடர்பான அனைத்து முக்கிய உத்தரவுகளும், தலைமை தேர்தல் கமிஷனர், இரண்டு தேர்தல் கமிஷனர்கள் என, மூன்று கமிஷனர்களும் ஒருமனதாக முடிவெடுத்தவை என, இந்திய தேர்தல் கமிஷன் ஆணித்தரமாக தெளிவுபடுத்தி உள்ளது.

மேலும், இந்த எஸ்.ஐ.ஆர்., நடைமுறைகளையும், 'படிவம் 6' உறுதிமொழியையும், உச்சநீதிமன்றமே உறுதி செய்து, சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும், ஜனநாயக அமைப்புகளையும் கொச்சைப்படுத்தும் ராகுலின் பொய் மூட்டைகள், சுக்குநுாறாக உடைந்து போயின.

வாக்காளர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் சீர்திருத்தங்களை, திசைதிருப்ப எண்ணும் எதிர்க்கட்சிகளின் நாச அரசியலை, மக்கள் ஏற்க மாட்டார்கள். ராகுலின் அரசியல் பித்தலாட்டங்களுக்கு, மக்கள் மீண்டும் ஒருமுறை பாடம் புகட்டுவர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.