📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 07, 2026 11:03 AM

தென்னாப்பிரிக்கா எதிரான 3 டெஸ்ட் தொடர்.. 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா எதிரான 3 டெஸ்ட் தொடர்.. 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா எதிரான 3 டெஸ்ட் தொடர்.. 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில், மோசமான ஃபார்மில் தவித்து வரும் மார்னஸ் லபுஷேன் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் 2026 அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

தென் ஆப்பிரிக்க பயணத்திற்கான 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதில் 2023 முதல் மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கும் லபுஷேன் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் வங்கதேச அணிக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடரில் அவர் மிக மோசமாக செயல்பட்டதைத் தொடர்ந்து, அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. எனினும், இந்த விமர்சனங்களை கடந்து ஆஸ்திரேலிய தேர்வுக்குழுவினர் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, 2025 WTC சாம்பியனான தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இத்தொடருக்கு பேட் கம்மின்ஸ் தலைமை தாங்குகிறார். இந்த அணியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் கூப்பர் கோனோலி, வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் நேசர் மற்றும் மேத்யூ குன்னெமன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் இவர்கள் மூவரும் அணியில் இடம் பெற்றிருக்கவில்லை.

அதே நேரத்தில், 2018-ல் நடந்த சாண்ட்பேப்பர்கேட் சர்ச்சைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கான ஆஸ்திரேலியாவின் முதல் டெஸ்ட் சுற்றுப்பயணம் இதுவாகும். இதில் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் வெதரால்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணியை கேப்டன் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட் மற்றும் மைக்கேல் நேசர் ஆகியோர் பலப்படுத்துகின்றனர். சுழற்பந்து வீச்சுத் துறையை நாதன் லியோன் மற்றும் மேத்யூ குன்னெமன் ஆகியோர் கவனித்துக் கொள்வார்கள்.

டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன் மற்றும் மேத்யூ ரென்ஷா ஆகியோர் ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்களாகவும், கேமரூன் கிரீன், கூப்பர் கோனோலி மற்றும் பியூ வெப்ஸ்டர் ஆகியோர் ஆல்-ரவுண்டர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக அலெக்ஸ் கேரி மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் அணியில் இடம் பிடித்துள்ளனர். முதல் டெஸ்ட் அக்டோபர் 9ஆம் தேதி டர்பனிலும். 2வது டெஸ்ட் அக்டோபர் 18ஆம் தேதியும், 3வது டெஸ்ட் அக்டோபர் 27ஆம் தேதி கேப் டவுனில் நடைபெறும்

தென்னாப்பிரிக்க தொடரான ஆஸி. டெஸ்ட் அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனோலி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குன்னெமன், மார்னஸ் லபுஷேன், நாதன் லியோன், மைக்கேல் நேசர், மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.