📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 02, 2026 10:04 PM

திமுகவின் 110 மாவட்டங்கள் மறுசீரமைப்பை பார்வையிட 76 பிரதிநிதிகள் நியமனம்

திமுகவின் 110 மாவட்டங்கள் மறுசீரமைப்பை பார்வையிட 76 பிரதிநிதிகள் நியமனம்

சென்னை: திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 110 மாவட் டங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சீரமைப்புக்குழு வகுத்துத் தந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், வட்ட மற்றும் கிளைகள் மறுசீரமைக்கப்பட உள்ளன.

இப்பணிகளை நேரடியாக மேற்பார்வையிட்டு, அவற்றை தலைமைக்கு அனுப்பி வைக்கும் பொறுப்புக்காக ஒரு வருவாய் மாவட்டத்துக்கு இருவர் வீதம் மொத்தம் 76 பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இனிவரும் நாட்களில் மாவட்டச் செயலாளர்கள் நடத்தும் அனைத்து மாவட்டச் செயற்குழு கூட்டங்களும் இந்த பிரதிநிதிகள் முன்னிலையிலேயே நடத்தப்பட வேண்டும்.

மேலும், அடிமட்ட அளவிலான கட்சி மறுசீரமைப்பில் கருத்துகளோ அல்லது மாறுபாடுகளோ இருப்பின், கட்சியினர் தங்கள் மாவட்டத்துக்குரிய தலைமைப் பிரதிநிதிகளிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.

காணொலியில் இன்று ஆலோசனை

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுடன், ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்.2) மாலை 5 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். சட்டப்பேரவை நடைபெறாத நாட்களில் மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களை மாவட்டச் செயலாளர்கள் நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.