📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 10, 2026 03:02 PM

திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு பதவி

திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு பதவி

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்டின் (AGS Entertainment) தலைமை செயல் அதிகாரி(CEO) அர்ச்சனா கல்பாத்தி. இவரது நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகரும், தற்போதைய தமிழக முதல்-அமைச்சருமான விஜய் நடித்த ‘பிகில்’, ‘கோட்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின.

இந்த நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு தற்போது தமிழக அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. கோவில்களுக்கு மரபுசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவில் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம் பெற்றுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகைக்குட்பட்ட, ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேலுள்ள திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து உரிய பெயர்ப்பட்டியல் தயாரித்து அளித்திட, கீழ்க்கண்ட உறுப்பினர்களை கொண்ட மாநிலக்குழுவினை அமைத்து அரசு ஆணையிடுகிறது.

1. தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் பொம்மபுரம் ஆதினம், மயிலம் - தலைவர்

2. டாக்டர் கே.ராமநாதன், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி(ஓய்வு) - துணைத் தலைவர்

3. அர்ச்சனா கல்பாத்தி அகோரம் - உறுப்பினர்

4. ப.ரா.சம்பத், இ.ஆ.ப.(ஓய்வு) - உறுப்பினர்

5. மா.சுமதி (எ) சுமதிஸ்ரீ - உறுப்பினர்

6. த.வேல்முருகன் - உறுப்பினர்

7. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் - பதவி வழி உறுப்பினர்/செயலர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.